Thalapathy Vijay: ‘எண்ணித் துணிக கருமம்’.. முழு நேர அரசியல் வாதியாக விஜய்.. அரசியல் கட்சிபெயர் அறிவிப்பு!
என்னுடைய தாய், தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். - நடிகர் விஜய்!

விஜய்
தன்னுடைய அரசியல் கட்சி பெயரை அறிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் விஜய்!
அதில் அவர், “அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள்.
"விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.