Thalapathy Vijay: தேதி குறிச்ச தளபதி.. கிரவுண்டில் இறங்கி சிக்சர் அடிக்கப்போகும் நாள் என்ன தெரியுமா?
Thalapathy Vijay: நடிகர் விஜய்யின் சச்சின் படம் ரீ- ரிலீஸாகும் நாள் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் 20 ஆண்டுக்கு பின் தளபதி படத்தை காணும் குஷியில் ரசிகர்கள் உள்ளனர்.

Thalapathy Vijay: ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்தப் படம் நடிகர் விஜய்யின் கெரியரில் மிக முக்கியமான ஒன்று. இந்தப் படத்தில் விஜய்- ஜெனிலியா ஜோடி பலராலும் கவரப்பட்டது.
ரீ- ரிலீஸ் ஆகும் சச்சின் படம்
தமிழ் ரசிகர்களின் மனதில் எவர்கிரீன் படமாக அமைந்துள்ள இந்தப் படம் தற்போது ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார். சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வரும் கோடையில் இப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ரிலீஸாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. புனித வெள்ளி விடுமுறை தினத்தை குறிவைத்து இந்த படத்தை படக்குழு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பாடல் ரிலீஸ்
முன்னதாக, சச்சின் படத்தின் விஜய் பாடிய, வாடி வாடி கைப்படாத சீடி எனும் பாடலையும், கண்மூடித் திறக்கும் போது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கலைப்புலி தாணு அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, சச்சின் படத்தின் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் குஷியாக உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.
சச்சின் படம்
இந்தப் படத்தில் விஜயுடன், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப் பாடல்கள் அனைத்தும் எப்போது கேட்டாலும் துள்ளல் நடனமாட வைக்கும் விதமாக அமைந்திருக்கும்.
எதிர்பார்த்த வசூலை பெறாத சச்சின்
சச்சின் படத்தின் ரிலீஸ் சமயத்தில், ரஜினியின் சந்திரமுகி படம் ரிலீஸ் ஆனது. இதனால், சச்சின் படத்தால் போதுமான வசூலை பெற முடியாமல் போனது. அத்தோடு அதே சமயத்தில் வெளியான கமல் ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் தோல்வியையே சந்தித்தது. இதனால், நல்ல இளைஞர்களைக் கவரும் வகையில் நல்ல கதையை கொண்டிருந்தாலும் சச்சின் படத்தால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
20 ஆண்டுக்கு பின் ரீ- ரிலீஸ்
இந்நிலையில் தான், சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அப்படத்தின் தயாரிப்பாளர் இந்த ரீ- ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே விஜய்யின் கில்லி படம் ரீ- ரிலீஸ் ஆகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதனால், தற்போது சச்சின் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்தால் நல்ல வரவேற்பை பெறும் என எண்ணி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.
ஜன நாயகன் அப்டேட்
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு, படத்தின் டீசர், டிரெயிலர், பாடல் அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சம்மர் ட்ரீட்டாக அமைந்துள்ளது இந்த சச்சின் படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு. இதனால், இந்த முறை சச்சின் படம் விட்டதை பிடிக்கும் என்றதை நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு, படத்தின் டீசர், டிரெயிலர், பாடல் அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சம்மர் ட்ரீட்டாக அமைந்துள்ளது இந்த சச்சின் படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு. இதனால், இந்த முறை சச்சின் படம் விட்டதை பிடிக்கும் என்றதை நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

டாபிக்ஸ்