Thalapathy Vijay: "தங்கை கொடுத்த தனிமை வலி.. முடங்கி போன சுட்டி விஜய்"- ஸ்கூல் டீச்சர் சொன்ன சீக்ரெட்
Thalapathy Vijay: அவர் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தி செய்ய ஆரம்பித்து விட்டால், அதில் அவர் பெஸ்டாக வந்து விடுவார், பள்ளியில் அவர் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதில் நன்றாகவும் தேர்ந்தார். விஜய், அவருக்கான விஷயங்களை அவரே தீர்மானம் செய்வார். - ஸ்கூல் டீச்சர் சொன்ன சீக்ரெட்

Thalapathy Vijay: தங்கை கொடுத்த தனிமை வலி.. முடங்கி போன சுட்டி விஜய்"- ஸ்கூல் டீச்சர் சொன்ன சீக்ரெட்
Thalapathy Vijay: நடிகர் விஜயின் பள்ளி ஆசிரியர் நடிகர் விஜய் தொடர்பான அனுபவங்களை பிஹைண்ட் வுட்ஸ் youtube சேனலுக்கு பகிர்ந்திருந்தார்.
அதில் அவர் பேசும் போது, "நடிகர் விஜய் ஐந்தாம் வகுப்பில் இருந்து, எங்கள் பள்ளியில்தான் படித்தார். அவர், எல்லா குழந்தைகளையும் போல சேட்டையெல்லாம் செய்ய மாட்டார். அவர் எந்த சூழ்நிலையிலும், எந்த ஒரு மாணவரையும் துன்புறுத்தியது கிடையாது.
யாரையும் துன்புறுத்தியது கிடையாது
அது வார்த்தையாலும் சரி, செயலாலும் சரி, அவர் யாரையுமே தொந்தரவு செய்ய மாட்டார். அதற்காகவே, நாங்கள் அவரை கடவுளின் குழந்தை என்று அழைப்போம். விஜய் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது அவரது தங்கையான வித்யா எல்கேஜி படித்துக் கொண்டிருந்தார். அவரை நாங்கள் பட்டாம்பூச்சி என்று அழைப்போம். அவரும் அவரது அண்ணனான விஜயும் அவ்வளவு பாசமாக இருப்பார்கள்.