களமிறங்கி மக்களை சந்திக்கும் தளபதி.. ஜனவரி முதல் சுற்றுப்பயணம் செய்யும் தளபதி விஜய் - தாடி பாலாஜி சொன்ன விஷயம்
2025 ஜனவரி 27 முதல் தமிழ்நாடு முழுக்க அரசியல் சுற்றப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் தளபதி விஜய். நாம் ஒற்றுமையா இருந்தால் தான் தலைவரை அரியணையில் அமர வைக்க முடியும் என்று நடிகர் தாடி பாலாஜி பேசியுள்ளார்.

தவெக கட்சி தலைவரும், நடிகருமான விஜய் தனது கட்சி அலுவலகமான பனையூரில் வைத்து அரசியல் செய்கிறார். ட்விட்டரில் கண்டனம் தெரிவிப்பதும், அறிக்கை விடுவதும், மூத்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் என்றால் போட்டோவுக்கு மாலை அணிவித்து மரியாதை கொடுப்பதுமாக இருந்துகொண்டு கள அரசியல் செய்யாமல் இருந்து வருகிறார் என தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து 2025இல் அவர் தமிழ்நாடு மக்களை நேரில் சந்திக்கும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாராம். இதுபற்றி தவெக கட்சியை சேர்ந்த நடிகரும், விஜய்யின் பல படங்களில் நடித்தவருமான நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார்.
சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "எல்லாம் விஜய்யின் முடிவு தான். அவர் எது சொன்னாலும் பவர் புல்லா இருக்கும். ஒன்னு சொன்னாலே பெரிசா ஆகிடுது. ஜனவரி 27ஆம் தேதி முதல் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.