விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கில்லி முதல் மெர்சல் வரை.. ஒரே ஓடிடியில் விஜயின் சூப்பர்ஹிட் படங்கள்! - முழு விபரம் இங்கே
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கில்லி முதல் மெர்சல் வரை.. ஒரே ஓடிடியில் விஜயின் சூப்பர்ஹிட் படங்கள்! - முழு விபரம் இங்கே

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கில்லி முதல் மெர்சல் வரை.. ஒரே ஓடிடியில் விஜயின் சூப்பர்ஹிட் படங்கள்! - முழு விபரம் இங்கே

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 21, 2025 05:42 PM IST

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வரவேற்பை பெற்று ஓடிடி ப்ளே ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் சில திரைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கில்லி முதல் மெர்சல் வரை.. ஒரே ஓடிடியில் விஜயின் சூப்பர்ஹிட் படங்கள்! - முழு விபரம் இங்கே
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கில்லி முதல் மெர்சல் வரை.. ஒரே ஓடிடியில் விஜயின் சூப்பர்ஹிட் படங்கள்! - முழு விபரம் இங்கே

பல்வேறு திரையரங்குகளில் அவரது நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்று ஓடிடி ப்ளே ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் திரைப்படங்களை பார்க்கலாம்.

கில்லி

விஜயை அதிரடி கதாநாயகனாக உருமாற்றிய திரைப்படம் கில்லி. விஜயின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்தப்படத்தில் விஜய் கபடி வீரர் சரவணவேலு கதாபாத்திரத்தில் நடித்தார்.

விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்த நிலையில் வில்லனாக பிரகாஷ் ராஜ் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தார். வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்தப்படத்தில் அவர்களுடன் இணைந்து ஆஷிஷ் வித்யார்த்தி, பாண்டு, தாமு, மயில்சாமி, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

போக்கிரி

2006-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'போக்கிரி' படம் 2007ம் ஆண்டு தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. பிரபல நடன இயக்குநர் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய், வடிவேலு, அசின், நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொங்கல் வெளியீடாக வெளியான இந்தத்திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது.

ஃப்ரெண்ட்ஸ்

2001-ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ். விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயாணி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படம் காமெடி மற்றும் குடும்ப பாங்கான கதையை முன்னிறுத்தியது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

மெர்சல்

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெர்சல். இந்தத்திரைப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மருத்துவதுறையில் நடக்கும் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்திய இந்தப்படம் விஜயின் கெரியரில் மிக மிக முக்கியமான திரைப்படமாக அமைந்திருந்தது. கூடவே அவரது கெரியரை திருப்பிப்போட்ட துப்பாக்கி படம் இந்த ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. கண்டு களித்து மகிழுங்கள்.