Thalapathy vijay: ‘உங்க மனசுல அப்படியே வாழ்ந்து’ - கேரள ரசிகர்கள் முன்னர் எமோஷனல் ஆன விஜய்! - ஆர்ப்பரித்த கூட்டம்!
தமிழ்நாடும் சரி, கேரளாவும் சரி எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. இந்த ஜென்மம் மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நான் உங்க விஜய்தான். உங்களுடைய தளபதிதான். இந்த 32 வருஷத்துல என்ன ஒரு நடிகனா மட்டும் பார்க்காம, உங்க வீட்டுப்பிள்ளையா பார்த்தீங்க பாருங்க அது ரொம்ப ஆச்சரியாம இருக்கு - விஜய்!
நடிகர் விஜயின் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கிளைமாக்ஸ் காட்சி தொடர்பான படப்பிடிப்பிற்காக விஜய் கேரளா சென்று இருக்கிறார்.
கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு விஜய் கேரளா வருவதையறிந்த கேரள விஜய் ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக திருவனந்தபுரம் விமானநிலையத்தில் முண்டியடித்தனர். விஜய் மீது கொண்ட அன்பை அவர்கள் ஆர்ப்பரித்து வெளிப்படுத்தியதை பார்த்த விஜய் நெகிழ்ந்தார். தொடர்ந்து அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் கூடிய காரணத்தால், திருவனந்த புரமே ஸ்ம்பித்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் விஜய் அங்குள்ள ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்றும் ரசிர்கர்களை சந்தித்த விஜய் அவர்கள் முன் பேசினார்.
அவர் பேசும் போது, “உங்கள் வீட்டு பிள்ளையாக நீங்கள் என்னை பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் மனசுல அப்படியே வாழ்ந்து விட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
தமிழ்நாடும் சரி, கேரளாவும் சரி எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. இந்த ஜென்மம் மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நான் உங்க விஜய்தான். உங்களுடைய தளபதிதான். இந்த 32 வருஷத்துல என்ன ஒரு நடிகனா மட்டும் பார்க்காம, உங்க வீட்டுப்பிள்ளையா பார்த்தீங்க பாருங்க அது ரொம்ப ஆச்சரியாம இருக்கு.” என்று பேசினார்.
முன்னதாக, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் போஸ்டர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. அதன் மூலம், நடிகர் விஜய் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது உறுதியானது.
2023 ஆம் ஆண்டு அன்று சென்னையில் முதல் அட்டவணையுடன் கோட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அக்டோபர் 9 ஆம் தேதி ராஜு சுந்தரம் இசையமைத்த ஒரு பாடல் காட்சியுடன் இந்த ஷெட்யூல் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, நவம்பர் 3 ஆம் தேதி விஜய்யுடன் இரண்டாவது ஷெட்யூலுக்காக டீம் தாய்லாந்திற்கு சென்றது. பெரும்பாலான காட்சிகள் பாங்காக்கில் படமாக்கப்பட்டன. இந்த தருணம் 10 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விஜய் மற்றும் படக்குழுவினர் சென்னை திரும்பினர். லொகேஷன் ஸ்கூட்டிங்கைத் தொடர்ந்து, மூன்றாவது ஷெட்யூல் நவம்பர் இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் தொடங்கியது.
முக்கியமான காட்சிகளை படமாக்க இயக்குனர் கணிசமான நடிகர்களை கூட்டி, டிசம்பர் 27 க்குள் ஷெட்யூலை முடித்தார். சிறிது இடைவெளிக்குப் பிறகு, ஜனவரி 7 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு அன்று சென்னையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது குறிப்பித்தக்கது
கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜயின் இந்தத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக இருவரும் புதிய கீதை திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.
படத்தை பற்றி பேசிய யுவன் ஷங்கர் ராஜா, “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் அப்டேட்டை நான் சொல்ல மாட்டேன். இந்த முறை நான் தெளிவாக இருக்கிறேன். பேச்சு இல்ல.... வீச்சுதான். நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது” என்று பேசினார்.
.இந்தப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும் துணை கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய கேமராமேன் சித்தார்த் நுனி கேமராமேனாக பணியாற்றுகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்