Thalapathy Vijay: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?..போட்டு வாங்கிய ஆங்கர்; கோட் அப்டேட் கொடுத்த யுவன்.. தெறித்த ரசிகர்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?..போட்டு வாங்கிய ஆங்கர்; கோட் அப்டேட் கொடுத்த யுவன்.. தெறித்த ரசிகர்கள்

Thalapathy Vijay: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?..போட்டு வாங்கிய ஆங்கர்; கோட் அப்டேட் கொடுத்த யுவன்.. தெறித்த ரசிகர்கள்

Kalyani Pandiyan S HT Tamil
Published May 27, 2024 11:35 AM IST

Thalapathy Vijay: பிரபல இசையமைப்பாளரான யுவன் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

Thalapathy Vijay: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?..போட்டு வாங்கிய ஆங்கர்; கோட் அப்டேட் கொடுத்த யுவன்.. தெறித்த ரசிகர்கள்
Thalapathy Vijay: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?..போட்டு வாங்கிய ஆங்கர்; கோட் அப்டேட் கொடுத்த யுவன்.. தெறித்த ரசிகர்கள்

யுவன் கொடுத்த அப்டேட்

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவன் ஷங்கர் ராஜாவிடம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் அப்டேட் குறித்து கேட்டார். அப்போது பேசிய அவர், படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. முதன்முறையாக தளபதி விஜய் இந்தப்படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார்.” என்று கூறினார்.  கோட் படத்தில் இருந்து முன்பு வெளியான ‘விசில் போடு பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். இந்தப்பாடல் கடுமையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார். தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாது, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. அண்மையில் இந்தப்படத்தில் விஜய் சம்பந்தமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார்.  

நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது முறையாக யுவன் 

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.

பொதுவாகவே விஜய் படத்தில் நடனம் பட்டையைக் கிளப்பும். இப்படத்திலும் நடனத்திற்கு வலுவாக இடம்தரும் ராஜூ சுந்தரம், சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து பாடல்களுக்கு நடன அமைப்பினை செய்துள்ளனர். அதேபோல், விஜய் படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. அதற்கும் தீனிபோடும் வகையில் திலீப் சுப்புராயன் மாஸ்டர், தி கோட் திரைப்படத்துக்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.