Thalapathy 69: ‘ஒன் லாஸ்ட் டைம்..ஒன் லாஸ்ட் டான்ஸ்’.. கண்ணீர் விடும் ரசிகர்கள்.. ‘தளபதி 69’ படத்தின் அப்டேட் இங்கே!-thalapathy vijay h vinoth thalapathy 69 update revealed sep 14 says kvn productions - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy 69: ‘ஒன் லாஸ்ட் டைம்..ஒன் லாஸ்ட் டான்ஸ்’.. கண்ணீர் விடும் ரசிகர்கள்.. ‘தளபதி 69’ படத்தின் அப்டேட் இங்கே!

Thalapathy 69: ‘ஒன் லாஸ்ட் டைம்..ஒன் லாஸ்ட் டான்ஸ்’.. கண்ணீர் விடும் ரசிகர்கள்.. ‘தளபதி 69’ படத்தின் அப்டேட் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 13, 2024 05:26 PM IST

Thalapathy 69: ‘தளபதி 69’ படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த அப்டேட்டில் விஜயின் கடைசி படமாக அமைய இருக்கும் தளபதி 69 குறித்து ரசிகர்கள் பேசுகின்றனர்.

Thalapathy 69: ‘ஒன் லாஸ்ட் டைம்..ஒன் லாஸ்ட் டான்ஸ்’.. கண்ணீர் விடும் ரசிகர்கள்.. ‘தளபதி 69’ படத்தின் அப்டேட் இங்கே!
Thalapathy 69: ‘ஒன் லாஸ்ட் டைம்..ஒன் லாஸ்ட் டான்ஸ்’.. கண்ணீர் விடும் ரசிகர்கள்.. ‘தளபதி 69’ படத்தின் அப்டேட் இங்கே!

இந்த நிலையில் விஜயின் கடைசி திரைப்படமான தளபதி 69 குறித்தான அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அந்தப்படத்தை தயாரிக்கும் கன்னட திரைப்பட நிறுவனமான கே.வி. என் நிறுவனம், தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது. அதன்படி தற்போது படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த அப்டேட்டில் விஜயின் கடைசி படமாக அமைய இருக்கும் தளபதி 69 குறித்து ரசிகர்கள் பேசுகின்றனர். தொடர்ந்து இறுதியில் தளபதி 69 படக்குழு தொடர்பான விபரங்களை நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தளபதி 69 அப்டேட் வீடியோ!

 

‘சதுரங்கவேட்டை’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான ஹெச்.வினோத், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கியதின் மூலம் கவனம் மிகு இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ ‘வலிமை’ ‘துணிவு’ உள்ளிட்ட படங்களை இயக்கி நட்சத்திர இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார். இவர்தான்  ‘தளபதி 69’ படத்தை இயக்கப்போவதாக நியூஸ் 18 சேனல் நடத்திய மகுடம் விழாவில் பேசி இருந்தார். விஜய் அடுத்ததாக அரசியலுக்கு செல்ல இருப்பதால் இந்தப்படம் அரசியல் படமாக இருக்குமா என்ற கேள்விக்கு, இந்தப்படம் முழுக்க முழுக்க விஜயின் படமாக இருக்குமென்று அவர் கூறியிருந்தார். 

முன்னதாக, ஹெச். வினோத் இன்று நடைபெற்ற நந்தன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

அதில் அவர் பேசும் போது, “இந்தப் படத்தின் இயக்குனநரான சரவணன் ‘நந்தன்’ படத்தை நான் பார்த்தே தீர வேண்டும் என்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக என்னை டார்ச்சர் செய்து கொண்டிருந்தான். ஆனால், நான் அதிலிருந்து நழுவிக் கொண்டே இருந்தேன். காரணம் என்னவென்றால், சசிக்குமாரும் அவனும் கடைசியாக இணைந்த ‘உடன்பிறப்பே’ திரைப்படம் பாச மழையை பொழிந்திருக்கும். அதனால் இந்தப்படமும் அதே மாதிரி இருக்கும் என்று நினைத்து தள்ளி போட்டுக் கொண்டே இருந்தேன்.

ஒரு நாள் பார்த்தோம்

இந்த நிலையில் ஒருநாள் நண்பர்கள் எல்லோரும் அந்த படத்தை பார்க்கலாம் என்று நந்தனை பார்த்தோம். முதல் 10 முதல் 15 நிமிடங்கள் படம் நார்மலாக சென்று கொண்டிருந்தது சசிக்குமாரின் லுக் பயங்கரமாக இருந்தது. ஆனால், படம் போகப் போக வந்த காட்சிகளும், நடிப்பும் எங்களுடன் பயங்கரமாக கனெக்ட் ஆனது.

படத்தில், நிறைய விஷயங்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. நான் கிராமத்தில் வளர்ந்த ஆள் தான். எனக்கே படத்தில் காண்பிக்கப்பட்ட விஷயங்கள் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னைப்பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், பெரிய பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படமோ அல்லது பெரிய ஹீரோ நடிக்கக்கூடிய படமோ அல்லது பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை அள்ளக்கூடிய படமோ கிடையாது.

நல்ல மனிதராக மாற்ற வேண்டும்

ஒரு மனிதனை நல்ல மனிதனாக மாற்றக்கூடிய படம் எதுவோ அந்த படங்கள்தான் நல்ல படங்கள். அந்த வகையில் நந்தன் திரைப்படம் நம்மை நல்ல மனிதராக மாற்ற முயற்சி செய்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இரா சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்ததாலோ அல்லது சசிகுமார் பொருட்காட்சியில் வைத்து பாதுகாக்கும் அளவுக்கு நல்லவர் என்பதாலோ சொல்லவில்லை. உண்மையிலேயே இந்தப்படம் நல்லப்படம். அதனால், நீங்கள் இந்த படத்தை சப்போர்ட் செய்ய வேண்டும்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.