Thalapathy Vijay Selfie: அப்போ மாஸ்டர்! இப்போ ஸ்டூடண்ட் - கோட் பட லுக்கில் ரசிகர்களுடன் விஜய்யின் மாஸ் செஃல்பி
வாரிசு படப்பிடிப்பு பிரேக்கில் விஜய் கிரிக்கெட் விளையாடிய வைரல், அடுத்து கோட் ஷுட்டிங்கில் மீசை இல்லாமல் இளமையான தோற்றத்தில் வந்தபோது கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை தொடர்ந்து தற்போது ரசிகர்களுடன் செஃல்பி புகைப்படம் என வைரல் மயமாகியுள்ளார் தளபதி விஜய்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். வயதான் லுக்கில் ஒன்றும், மீசை இல்லாமல் இளமையான லுக்கில் மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இதையடுத்து, சமீபத்தில் கோட் படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற அவரை காண பெரும் கூட்டம் கூடியது. மீசை இல்லாமல் இளமையான தோற்றத்தில் இருக்கும் அவரை பார்த்து ரசிகர்கள் புகைப்படங்களை கிளிக் செய்து இணையத்தில் உலாவவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ரசிகர்களை பின்னணியாக வைத்து தளபதி விஜய் கோட் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கோட் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ரசிகர்களை பார்த்து வாரிசு படத்தின் ரஞ்சிதம் பட ஸ்டைலில் முத்தங்களை பறக்க விட்டார் விஜய். பின்னர் கையசைத்தவாறு செஃல்பியும் எடுத்துக்கொண்டார்.
முன்னதாக, மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது இதேபோன்ற செஃல்பி புகைப்படத்தை எடுத்து அதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார் தளபதி விஜய். தற்போதை அதைபோன்ற மற்றொரு செஃல்பி புகைப்படத்தை எடுத்திருக்கும் நிலையில் பயர், ஹார்ட் எமோஜிக்களுடன் காட்டு தீயாய் பரவி வருகிறது.
வாரிசு பட இடைவெளியில் பாடலாசிரியர் விவேக் உள்பட படக்குழுவுடன் இணைந்து தளபதி விஜய் கிரிக்கெட் விளையாடியோ விடியோ வெளியாகி வைரலானது. இந்த விடியோவை பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கோட் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக வந்த விஜய்யை காண்பதற்கு கூடிய கூட்டத்தின் நடுவே, விஜய் நிற்கும் புகைப்படமும் வெளியானது.
இதன்பின்னர் தற்போது ரசிகர்களுடன் கோட் லுக்கில் செஃல்பி என வைரல் மோடிலேயே கடந்த இரு நாள்களாக இருந்து வருகிறார் விஜய்.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் கோட் படம் உருவாகி வரும் நிலையில் , படம் ஜூன் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் மீனாட்சி செளத்ரி, சிநேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்