Jananayagan: இது 200% தளபதி படம்.. உறுதியளித்த ஹெச்.வினோத்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jananayagan: இது 200% தளபதி படம்.. உறுதியளித்த ஹெச்.வினோத்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Jananayagan: இது 200% தளபதி படம்.. உறுதியளித்த ஹெச்.வினோத்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Malavica Natarajan HT Tamil
Jan 26, 2025 12:36 PM IST

Jananayagan: விஜய்யின் 69வது படமான ஜனநாயகன் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியை ரசிகர்கள் தற்போது மீண்டும் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Jananayagan: இது 200% தளபதி படம்.. உறுதியளித்த ஹெச்.வினோத்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
Jananayagan: இது 200% தளபதி படம்.. உறுதியளித்த ஹெச்.வினோத்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

இதனால், விஜய் நடிக்கும் கடைசி படம் நிச்சயம் மக்களுக்கு மிக நெருக்கமானதாக இருக்கும் என்று பலரும் நினைத்தனர். அதனால், பட பூஜையிலிருந்தே படத்தின் சின்ன சின்ன அப்டேட்டையும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

ஜனநாயகனான விஜய்

இந்நிலையில், ஜனவரி 26 குடியரசு தின நாளான இன்று, விஜய்யின் 69வது படத்திற்கு ஜனநாயகன் என பெயரிட்டிருப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியானதற்கு அடுத்த சில நொடிகளிவேயே ஜநநாயகன் படம் பற்றிய தகவல்களையும் வீடியோக்களையும், படக்குழுவினரின் கருத்துகளையும் தங்களின் யூகங்களையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வந்த வண்ணமாக இருக்கின்றனர்.

200% தளபதி படம்

அந்த வகையில், ஜனநாயகன் படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் சில நாட்களுக்கு முன் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சியின் மகுடம் விருது விழாவில் பேசிய வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

அந்தப் பேட்டியில், " இது 200 சதவீதம் தளபதி படமா இருக்கும். இது கமெர்சியலாக எல்லாரும் பார்க்கும் வகையிலான படமாக இருக்கும் என்றார்.

அரசியல் படம் அல்ல

விஜய் அரசியலுக்கு வந்ததால் இது அரசியல் சம்பந்தமான படமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஆனால், இது அரசியல் படமல்ல. இந்தப் படம் எடுக்கும் போதே, என்னுடைய படத்த எல்லா வயசுல இருக்கவங்களும் பாப்பாங்க, எல்லா அரசியல் கட்சிகளும் பார்ப்பாங்க. அதனால இது எல்லாருக்குமான படமா இருக்கணும்ன்னு சொன்னாரு.

அதனால, இது அரசியல் கட்சியையோ அரசியல் தலைவரகளையோ தாக்கும் படமாக இருக்காது. இது சில சின்ன சின்ன விஷயங்களை வச்சி எடுத்த 100 சதவீத கமர்சியல் படமா தான் இருக்கும்" என்றார்.

கவனம் ஈர்த்த போஸ்டர்

விஜய்யின் கடைசி மற்றும் 69வது படத்தின் பெயர் 'ஜனநாயகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரே கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அவர் பொது இடத்தில் நின்று செல்ஃபி எடுப்பது போன்றும் அவருக்கு பின் ஆயிரக் கணக்கானோர் நின்று கோஷமிட்டு குரல் எழுப்பது போன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதனால், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகத்தின் கதை அரசியலைத் தொடர்பு கொண்டு தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் முன்னதாக மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த சமத்தில் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது.

ரீ-கிரியேட் செய்த விஜய்

இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவர் நெய்வேலியில் படப்பிடிப்பு தளத்தில் அவரைக் காண வந்த ரசிகர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் வாகனம் மீது ஏறி நின்று எடுத்த செல்ஃபி தான் சில நாட்களுக்கு ஹாட் டாப்பிக்காக இருந்தது.

இந்நிலையில், அதே போன்ற புகைப்படத்தை விஜய்யின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வந்துள்ளதால், இந்தப் படத்திலும் விஜய் நிச்சயம் சம்பவம் செய்வார் என்பது தெரியவந்துள்ளதாக ரசிகர்கள் ஆர்பரித்து வருகின்றனர்.

தளபதி 69 அறிவிப்பு

நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில், அவரது கடைசி படமான தளபதி 69ல் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோலும் நடிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தில், பிரேமலு நடிகை மமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் நடிக்க உள்ளதாக தளபதி 69 படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்தது.

தமிழ் திரைப்படத் துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த நடிகர் விஜய் கோலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் குறிப்பாக மலையாள ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். இவர், தற்போது தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.