Thalapathy 69: இத நாங்க எதிர்பாக்கலையே.. தொடங்கிய இடத்தில் முடிக்கும் விஜய்? தளபதி 69 பட தலைப்பு இதுவா?
Thalapathy 69: தளபதி 69 படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் சொல்லப்பட்டு வருகிறது.

தளபதி விஜய், தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ள தனது கடைசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அரசியலில் தீவிரமாக இறங்கி இருக்கும் அவரின் கடைசி படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் தயாராகி வருகிறார்.
இது தான் பட பெயரா?
இதன் காரணமாக அவரின் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற சலசலப்பு தீவிரமடைந்து இருக்கிறது. அதன்படி தளபதி விஜய்யின் தளபதி 69 படத்திற்கு நாளைய தீர்ப்பு என்று பெயரிட படக்குழு ஆலோசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இருப்பினும் இது உறுதியான தகவல் இல்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். மேலும் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
நாளைய தீர்ப்பு
முன்னதாக நடிகர் விஜய் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலமாக தான் சினிமாவில் அறிமுகமானார். விஜய்யின் தந்தையும், திரைப்படத் தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய, நாளைய தீர்ப்பு, விஜய்யின் தாயும், பின்னணிப் பாடகியுமான ஷோபா சந்திரசேகரால் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியடைந்தது. அத்துடன் விஜய்யின் தோற்றத்தை பலரும் விமர்சனம் செய்தார்கள்.
அரசியல் படம்
சதுரங்கவேட்டை’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான ஹெச். வினோத், ‘ தீரன் அதிகாரம் ஒன்று ’ படத்தை இயக்கியதின் மூலம் கவனம் மிகு இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து அஜித்தின் ‘ நேர் கொண்ட பார்வை ’ ‘ வலிமை ’ , ‘ துணிவு ’ உள்ளிட்ட படங்களை இயக்கி நட்சத்திர இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார். இப்படங்கள் விஜய்யை கவர்ந்த காரணத்தினால் தனது கடைசி படமான தளபதி 69யை ஹெச். வினோத்திற்கு கொடுத்து உள்ளார்.
விஜய் அடுத்ததாக அரசியலுக்கு செல்ல இருப்பதால் இந்தப் படம் அரசியல் படமாக இருக்குமா என்ற கேள்விக்கு, தளபதி 69 படம் முழுக்க முழுக்க விஜய்யின் படமாக இருக்குமென்று முன்னதாக ஹெச். வினோத் கூறியிருந்தார்.
படத்தில் நடிப்பவர்களின் பட்டியல்
அனிமல் திரைப்படம் மூலம் ரீ எண்ட்ரி ஆன நடிகர் பாபி டியோல், ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்த நடிகை பூஜா ஹெக்டே, பிரேமலு படத்தின் நாயகி மமிதா பைஜு, இயக்குநரும் நடிகருமான கௌதம் மேனன் போன்றோர் விஜய் 69 படத்தில் இணைந்து உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் தெரிவித்து இருந்தது.
கோட் படம்
நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு ( 2024 ) செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்