Thalapathy 69: த்ரிஷா இல்ல இவங்க தான்.. மீண்டும் செல்பி நடிகையுடன் சேர பிளான் போட்ட விஜய்
Thalapathy 69: விஜய்யின் 69 ஆவது படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி விஜய், சமந்தா என இருவரின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

த்ரிஷா இல்ல இவங்க தான்.. மீண்டும் செல்பி நடிகையுடன் சேர பிளான் போட்ட விஜய்
தி கோட் படத்தை தொடர்ந்து தளபதி 69 என்ற பெயருடன் விஜய் அடுத்த படத்தில் நடிக்க தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் ஹீரோயினாக சமந்தா மீண்டும் விஜய்க்கு, ஜோடியாக நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கி இருக்கும் நிலையில் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிரபல கோலிவுட் தயாரிப்பு பேனரான கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. இவர்கள் அனைவரும் இந்த படத்திற்காக பணிபுரிவதாக கூறப்படுகிறது ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இந்த படம் குறித்த முழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.