Thalapathy 67: இப்போதைக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும் - லோகேஷ் கனகராஜ்
பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்
தளபதி 67 அப்பேட் குறித்து இப்போதைக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நடிகை திரிஷாவுக்கு விஜய் ஜோடியாக நடிக்கிறார்.
ஆனால் தளபதி 67 படத்தில் விஜய் திரிஷா இருவரையும் தாண்டி வில்லன்களுக்கு தான் லோகேஷ் கனகராஜ் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின் போன்ற பலர் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த படம் லோகேஷின் LCU-ன் ஒரு பகுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் சொல்லவில்லை. மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷுடன் இணைந்த விஜய், இதில் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் தளபதி 67 ஆவது படத்தில் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிக்க உள்ளராம். நெகட்டிவ் ஷேட் கொண்ட கேரக்டரில் நடிகர் விஜய் நடிக்கிறா என கூறப்படுகிறது.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கஷ்மீரில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது. அந்த தகவலின் படி பிக் பாஸ் 6 சீசன் மூலம் பிரபலமான ஜனனி நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் இலங்கை தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தார். தற்போது விஜய் நடிக்கும் தளபதி 67 தற்போது நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பதக்கவும் விரைவில் தளபதி 67 படக்குழுவினருடன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு படமான மைக்கேல் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகவுள்ளது. அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார் . அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ் , மாணவ,மாணவியர் தளபதி 67 அப்டேட் எப்போது என கேட்டனர். அதற்கு லோகேஷ் கனகராஜ் வருகின்ற பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று, நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அப்டேட் வருகிறது! இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் என மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார். மாணவர்கள் விசில் அடித்து கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.