Thalapathy 67: பக்கா மாஸ்… தளபதி 67 படத்தில் யாரலாம் இருக்காங்க பாருங்க
தளபதி 67 படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்தாக நடிக்கும் படம், தளபது 67. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கி ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று செய்தி வெளியாகி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் தளபதி 67 படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கையில் காப்புடன் இணைந்து நிற்கின்றனர். விஜய் கையில் அதில் ரத்த கறை இருப்பதால் கண்டிப்பாக படம் ஆக்ஷனாக
இதுகுறித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக தளபதி விஜய் அவர்களுடன் இணைவதை பெருமையாக கருதுகிறது.
தளபதி 67 என தற்போதைக்கு கூறப்படும் இந்த படத்தை ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். லலித், ஜெகதீஷ் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இணைந்துள்ளனர்.
மேலும் தளபதி விஜய் நடித்த ’கத்தி’ ’மாஸ்டர்’ ’பீஸ்ட்’ ஆகிய படங்களை அடுத்து ’தளபதி 67’ படத்தில் இசையமைப்பாளராக ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் இணைந்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் பின்வருமாறு,
ஒளிப்பதிவாளர் : மனோஜ் பரமஹம்சா
சண்டை பயிற்சியாளர் : அன்பறிவ்
படத் தொகுப்பாளர் : பிலோமின் ராஜ்
கலை இயக்குனர் : சதீஷ்குமார்
நடன இயக்குனர் : தினேஷ்
வசன எழுத்தாளர் : லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி
நிர்வாக தயாரிப்பாளர் : ராம்குமார் பாலசுப்பிரமணியன்
மேலும், தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.