தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Thaadi Balaji's Wife Nithya Explain About Police Arrest

தப்பான வழியில சம்பாதிக்கிறோமா? - கதறும் தாடி பாலாஜி மனைவி !

Karthikeyan S HT Tamil
Jan 30, 2023 07:07 PM IST

Thaadi Balaji wife Nithya: தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு நடந்த மாதிரி மற்ற பெண்களுக்கு நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் - தாடி பாலாஜி மனைவி நித்யா

நித்யா
நித்யா

ட்ரெண்டிங் செய்திகள்

நித்யாவுக்கும், மணிக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்ததாகத் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மணி, தன்னுடைய காரை வீட்டின் வெளியில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அவரின் கார் கண்ணாடியை யாரோ உடைத்திருந்ததால் மணி அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து மணி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது சி.சி.டி.வி கேமரா பதிவு ஒன்றையும் மணி கொடுத்தார். அதில், நித்யா செல்போன் டார்ச் வெளிச்சத்தில் காரின் அருகில் வருவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் நித்யா மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து அவரிடம் விசாரித்தனர். இதையடுத்து, நித்யா மீது சட்டப்பிரிவு IPC 427 (பிறர் சொத்துக்களை சேதப்படுத்துதல்) கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இருப்பினும் இது பிணையில் வெளிவரக்கூடிய சட்டப்பிரிவு என்பதால், அவரை காவல்நிலைய ஜாமீனிலேயே விடுவித்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த நித்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: " எனது எதிர்வீட்டில் வசிக்கும் மணி கொடுத்த புகாரில், யாரோ அடையாளம் தெரியாத நபர் தான் காரை சேதப்படுத்தி இருப்பதாகவும், அது நானாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முழு சிசிடிவி காட்சியை பார்க்கும் போது, அந்த சம்பவம் நடந்த அன்று நான் “துணிவு” படம் பார்த்துவிட்டு இரவில் வீட்டிற்கு வந்தேன். அப்போது பதிவான சிசிடிவி காட்சிதான் அது மற்றபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால், அந்த ஆசிரியர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். காரை சரி செய்து கொடுக்கவேண்டும், இல்லையென்றால் என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்துவேன் என்றெல்லாம் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

மேலும், தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடி வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளார். நியாயம் கேட்டு காவல் நிலையம் சென்றால் அங்கும் மரியாதை இல்லை. அதனால் நானும் இந்த வழக்கை எதிர்கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன். நானும் அவர் அவதூறாக பேசியது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளேன். 

என்னதான் நான் தனியாக இருந்து போராடினாலும், எனக்கு பின்னால் இருந்து எவ்வளவு டைட்டில்ஸ் வைக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உனக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைக்கிறது. நீ எந்த மாதிரி தொழில் செய்கிற என்றெல்லாம் பேசுகிறார்கள். நாங்கள் எல்லாம் நேர்மையாக, உண்மையாக சம்பாதிக்க மாட்டோமா..ஏதாவது தப்பான வழியில போய்தான் சம்பாதிக்க வேண்டுமா?. தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு நடந்த மாதிரி மற்ற பெண்களுக்கு நடக்கக்கூடாது." என்று நித்யா தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்