தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kubera: குபேரா படத்தில் நடித்த தெலுங்கின் டாப் ஸ்டார்.. ஃபர்ஸ்ட் லுக் தேதியை அறிவித்த படக்குழு.. எகிறும் எதிர்பார்ப்பு!

KUBERA: குபேரா படத்தில் நடித்த தெலுங்கின் டாப் ஸ்டார்.. ஃபர்ஸ்ட் லுக் தேதியை அறிவித்த படக்குழு.. எகிறும் எதிர்பார்ப்பு!

Marimuthu M HT Tamil
Apr 30, 2024 08:58 PM IST

KUBERA: நடிகர் தனுஷ் படத்தில் நடித்து வரும் நாகார்ஜூனா குறித்த முக்கிய அப்டேட்டினை படக்குழு வெளியிட்டுள்ளது.

குபேரா திரைப்படத்தில் தனுஷ்
குபேரா திரைப்படத்தில் தனுஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் தனுஷ் தமிழ் மொழியில் நடிக்கத் தொடங்கி, தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் ஆகிய மொழிகள் வரை சென்றுவிட்டார். இவர் நடித்த 3 திரைப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறிடி எனும் பாடல், தனுஷின் புகழை முதலில் உலகளவில் வெளிச்சமிட்டுக் காட்டியது. இளம் வயதில் இதுவரை 2 தேசிய விருதுகளை வென்ற நடிகர் என்னும் பெயரையும் தனுஷ் பெற்றிருக்கிறார்.

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல துறைகளிலும் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தனது திறமையையும் நிரூபித்து வருகிறார், தனுஷ்.  அந்த வகையில் நடிகர் தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்தபோது, நடிகர் ராஜ்கிரண் மற்றும் ரேவதியை,  கதையின் மாந்தர்களாக வைத்து இயக்கி நடித்த படம்தான், பவர் பாண்டி.

 நடிகர் தனுஷ் தனது கேரியரில் மதிப்புமிக்க, தனது 50ஆவது படத்தை தானே இயக்கிவந்தார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷ் மொட்டையடித்த நிலையில் நடித்துள்ளார். அறிவிப்பு போஸ்டரில், தனுஷ் பின்னால் இருந்து, சட்டையின்றி கையில் கத்தியுடன் காட்சியளித்தார்.

இப்படத்தின் பெயர் ’ராயன்’(Raayan) என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் வத்திக்குச்சி திலீபனும் பின்னணியில் இருக்கின்றனர். அதில் காளிதாஸ் ஜெயராமும் வத்திக்குச்சி திலீபனும் ஒரு நடமாடும் உணவகத்தில் கூரிய கத்திகளை வைத்து முறைக்கின்றனர். இப்படத்துக்குண்டானை இசையினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் செய்கிறார். ஒளிப்பதிவினை ஓம்பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். 

இது ஒரு புறம் போய்க்கொண்டிருக்க, தனுஷ் தனது 51ஆவது படத்திலும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். அதன்பெயர் சமீபத்தில் ‘’குபேரா'' என அறிவிக்கப்பட்டது. இப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவலில் உருவாகி வருகிறது. இப்படத்தை தெலுங்கு படத்தின் முக்கிய இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். 2007ஆம் ஆண்டு இவர் கல்லூரி மாணவர்களின் வாழ்வியலை வைத்து இயக்கிய ’ஹேப்பி டேஸ்’என்னும் திரைப்படம் அப்போதே, மொழிகள் தாண்டி, தமிழ்நாட்டிலும் பல கல்லூரி மாணவர்களால் பார்க்கப்பட்டு, பாராட்டப்பட்டது.

தவிர, ’’குபேரா’’ படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷூடன் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி அமிகோஸ் கிரியேஷன்ஸ் சார்பில், சுனில் நரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர். 

இந்நிலையில் '’குபேரா’’ படத்தில் நடிக்கும் நாகார்ஜூனாவின் முதல் லுக்கினை நாளை மறுநாள் மே மாதம் 2ஆம் தேதி வெளியிடுவதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் தனுஷின் தோற்றம் தாடியுடன் யாசகர் போல இருக்கிறார். ஆனால், படத்தின் தலைப்பு ‘குபேரா’ என முரண்பாடாக இருக்கிறது. இது ரசிகர்கள் இடையே ஒரு ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இந்தப் படத்துக்குப் பின் தனுஷ், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கப்போகிறார் என்பதும் அப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப்போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்