இதுவரை எந்த இந்திய நடிகரும் செய்யாத விஷயம்..கின்னஸ் சாதனை புரிந்த காமெடியன்
உலக நடிகர்களில் இதுவரை யாரும் செய்திராத சாதனையை, தெலுங்கு சினிமாவின் காமெடியனான பிரம்மானந்தம் செய்துள்ளார். அதிக படங்கள் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
தெலுங்கு சினமாவின் முன்னணி காமெடியனாக இருப்பவர் பிரம்மானந்தம். தமிழிலும் இவர் பல படங்களில் காமெடியனாக கலக்கியுள்ளார். 67 வயதாகும் இவர் தற்போதும் காமெடி வேடங்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
கின்னஸ் சாதனை
கடந்த 1987இல். தெலுங்கு சினிமாவில் காமெடியனாக அறிமுகமான பிரம்மானந்தம், 37 வருடங்களில் 1000 படங்களை முடித்த உலகின் ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதையடுத்து அவரது பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன், அவருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் உள்பட பிற தென்னிந்திய மொழி மற்றும் இந்தி, நேபாளி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். காமெடி மட்டுமில்லாமல் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
டைமிங் கிங்
தமிழ் சினிமாவில் கவுண்டமணி போல் தெலுங்கு சினிமாவில் டைமிங், டைமிங், பாடி லாங்குவேஜ் என காமெடியில் பட்டையை கிளப்பும் நடிகராக இருந்து வருகிறார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ஆரம்பத்தில் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்த பிரம்மானந்தம் தனது நடிப்பு திறமையால் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். இவரது இந்த உலக சாதனை சினிமாவில் சா நினைக்கும் பலருக்கு உத்வேகம் அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பிரம்மானந்தம் தமிழ் படங்கள்
2004இல் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான நியூ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு 20 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்த ஆண்டில் இவரது நடிப்பில் இந்தியன் 2, தந்தி ஒன் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆன ஒரு தீ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் படங்களில் பெரும்பாலும் இவரது கதாபாத்திரத்துக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் டப்பிங் குரல் கொடுப்பார்.
ரூ.500 கோடி சொத்து
இந்திய காமெடி நடிகர்களில் பிரம்மானந்தம் பணக்கார நடிகராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.500 கோடிகளை தாண்டியுள்ளது. தெலுங்கு சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களின் ஆஸ்தான காமெடியனாக வலம் வருகிறார்.