நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்கப் போகுதா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ஷோபிதா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி எங்கும் பரவி வருகிறது. இந்த வதந்தி பரவ காரணம் என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்கப் போகுதா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?
நடிகை சமந்தாவிடமிருந்து விவாகரத்து பெற்று கடந்த டிசம்பரில் ஷோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா. தற்போது நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா தம்பதி தங்களது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்ற செய்தி தென்னிந்திய சினிமா வட்டாரம் எங்கும் பரபரப்பாக பேசப்படுகிறது. அப்படியானால் இந்த செய்தி பரவ காரணம் என்னவென்று இங்கு பார்ப்போம்.
சோபிதா துலிபாலா கர்ப்பமா?
மும்பையில் நடந்த WAVES 2025 என்ற நிகழ்ச்சியில் நடிகை ஷோபிதா துலிபாலா தனது வயிறு தெரியாதபடி புடவையை மூடியிருந்தார், ஆனால் வயிற்றுப் பகுதி சற்று பெரிதாக தெரிந்தது. இதனுடன் சமீபத்தில் ஷோபிதா தளர்வான ஆடைகளை அணிந்து வருவதும் இந்தப் பேச்சுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
