சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை.. கறாராக சொன்ன தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.. சிரஞ்சீவி ஆப்சென்ட்.. பின்னணி
சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை.. கறாராக சொன்ன தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.. சிரஞ்சீவி ஆப்சென்ட்.. பின்னணி குறித்துப் பார்ப்போம்.

சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை என்றும்; இனி ரசிகர் மன்ற ஷோக்கள் தியேட்டர்களில் இருக்காது என டோலிவுட் பிரபலங்கள் உடனான சந்திப்பிலும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தின் ரசிகர் காட்சி, டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்குப் போடப்பட்டது. அப்போது ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் நடந்த ரசிகர் காட்சியில் அல்லு அர்ஜூன் படத்தைப் பார்த்து ரசித்தார். இதனால் அவரை நேரில் பார்க்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவரும் நினைவிழந்தார். அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் தெலங்கானா சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ரசிகர் மன்றக் காட்சிகளை அனுமதிக்கமாட்டேன் என்றும்; எந்தவொரு சலுகையும் திரையுலகினருக்கு வழங்கப்படாது என அறிவித்தார்.