தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Teenz: ஆடியோ ரிலீஸிலும் புதுமை.. யுத்துக்கெல்லாம் யுத்தாக இறங்கிய ’டீன்ஸ்’ இயக்குநர் பார்த்திபன்.. குவியும் சாதனை

Teenz: ஆடியோ ரிலீஸிலும் புதுமை.. யுத்துக்கெல்லாம் யுத்தாக இறங்கிய ’டீன்ஸ்’ இயக்குநர் பார்த்திபன்.. குவியும் சாதனை

Marimuthu M HT Tamil
Apr 07, 2024 07:47 PM IST

திரையரங்கில் 4 ஷோ பாடல்களை ஓட்டி டீன்ஸ் படக்குழு சாதனைப் படைத்துள்ளது.

டீன்ஸ்
டீன்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனை சங்கத்தால் வழங்கப்பட்டது. 

13 குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த, 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல்எல்பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' திரைப்படம் தயாராகியுள்ளது. 

விரைவில் வெளியாகியுள்ள 'டீன்ஸ்' திரைப்படத்திற்கான இசையை இசையமைப்பாளர் டி.இமான் செய்ய, ஒளிப்பதிவினை ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி செய்துள்ளார். படத்தொகுப்பை ஆர். சுதர்சன் கையாண்டுள்ளார். 

'டீன்ஸ்' இசை வெளியீட்டு விழாவில் பாராட்டுப் பெற்ற 13 இளம் சாதனையாளர்களின் சார்பாக பேசிய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம், "'டீன்ஸ்' திரைப்படம் பற்றிக் கூற வேண்டும் என்றால் இது பார்த்திபனின் கனவு. அவரும் இசையமைப்பாளர் டி இமான் அவர்களும் முதல் முறையாக இணைந்துள்ளார்கள் பாடல்களை கேட்டேன், மிகவும் அருமையாக உள்ளன"என்றார்.

’’டீன்ஸ்’’ திரைப்படம் குறித்து கவிஞர் மதன் கார்கி பேசியதாவது, "தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுமையான படைப்பாக 'டீன்ஸ்' இருக்கும். பார்த்திபன் சார் இந்த கதையை என்னிடம் விவரிக்கும் போதே அவ்வளவு புதுமையாக இருந்தது. அதை திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக இமான் இசையமைத்துள்ளார். ஒரு புது இசையமைப்பாளரின் படைப்புகள் போல பாடல்கள் அவ்வளவு பிரஷ்ஷாக உள்ளன. படத்தில் பணியாற்றிய இளம் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்"என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில்,"புதுமை என்றாலே பார்த்திபன் தான். குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. ஆனால், பார்த்திபன் அதை சாதித்து காட்டியுள்ளார். கடின உழைப்பாளியும் இறைபக்தி அதிகம் கொண்டவருமான இமான் இனிமையான பாடல்களை இப்படத்திற்கு வழங்கி உள்ளார். படத்தை பார்த்துவிட்டு இதில் பங்காற்றிய ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாழ்த்த காத்திருக்கிறேன், நன்றி" என்றார்.

நடிகர் புகழ் பேசியதாவது, "குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது சவாலான விஷயம். பார்த்திபன் சார் அதை சாதித்து காட்டியுள்ளார். 'டீன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு குழந்தையாக நான் நடிக்க ஆசைப்படுகிறேன், நன்றி." என்றார். 

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், "என்னுடைய மகள் பார்த்திபன் சாரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிகிறார் என்பது மிகவும் பெருமையான விஷயம். டிரெய்லரை பார்த்த உடனேயே இது கட்டாயமாக திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் என்பது புரிகிறது. இதில் நடித்துள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்"என்றார்.

நடிகர் விதார்த் பேசுகையில், "இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் அவ்வளவு அருமையாக உள்ளன.படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய பேசுகிறேன் நன்றி வணக்கம். 'டீன்ஸ்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் நிறைய பேசுகிறேன்"என்றார்.

நடிகர் யோகி பாபு பேசுகையில், "பார்த்திபன் சார் உடன் பணியாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக, அவரிடம் கேட்டு வந்தேன். இறுதியாக 'டீன்ஸ்' படத்தில் அந்த ஆசை நிறைவேறி உள்ளது. அவருடன் இன்னும் நிறைய திரைப்படங்களில் பணியாற்ற ஆவலாக உள்ளேன், நன்றி"என்றார்.

நடிகர் தம்பி ராமையா கூறுகையில், "'டீன்ஸ்' திரைப்படத்தைக் காண்பதற்கு நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன். நடிகர், இயக்குநர் என்பதையும் தாண்டி, பார்த்திபன் சார் ஒரு மிகச்சிறந்த கவிஞர். இந்த படத்தில் ஏழு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். எதை செய்தாலும் புதுமையாக செய்யும் பார்த்திபன் சார் 13 முத்துக்களை இப்படத்திற்காக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார். அவர்கள் அனைவரும் நாளைய திரை வானில் சிறகடித்து பறக்கப்போவது உறுதி. இமானின் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன. கடின உழைப்புக்கு சொந்தக்காரர் அவர். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்"என்றார்.

மேலும் இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், "இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதற்காக பார்த்திபன் சாருக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்துள்ளோம். முதலில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில் தற்போது அது ஏழு பாடல்களாக வளர்ந்துள்ளது. பார்த்திபன் சாரும் நானும் எப்போதோ இணைந்து பணியாற்றி இருக்க வேண்டியது. அது இப்போதுதான் கைகூடி உள்ளது. அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், நன்றி"என்றார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்