Thalapathy 69 update: தளபதி 69ல் இணைந்த அசுரன் நடிகர்.. இவருக்கு தான் ஜோடி.. லேட்டஸ்ட் தகவல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy 69 Update: தளபதி 69ல் இணைந்த அசுரன் நடிகர்.. இவருக்கு தான் ஜோடி.. லேட்டஸ்ட் தகவல்!

Thalapathy 69 update: தளபதி 69ல் இணைந்த அசுரன் நடிகர்.. இவருக்கு தான் ஜோடி.. லேட்டஸ்ட் தகவல்!

Malavica Natarajan HT Tamil
Published Jan 08, 2025 03:26 PM IST

நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தில் அசுரன் பட நடிகர் டீஜே அருணாச்சலம் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 69 update: தளபதி 69ல் இணைந்த அரசன் நடிகர்.. இவருக்கு தான் ஜோடி.. லேட்டஸ்ட் தகவல்!
Thalapathy 69 update: தளபதி 69ல் இணைந்த அரசன் நடிகர்.. இவருக்கு தான் ஜோடி.. லேட்டஸ்ட் தகவல்!

தளபதி 69 விஜய்யின் கதாப்பாத்திரம் என்ன?

சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு செல்ல இருப்பதால், நடிகர் விஜய்யின் இந்தப் படம் நிச்சயம் அரசியலை மையப்படுத்தியே நகரும் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தளபதி 69 படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாகவே நடிக்க உள்ளார் எனக் கூறி வருகின்றனர். 

ஏற்கனவே, தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியையும், வலிமை படத்தில் அஜித்தையும் போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்து மிரட்டி இருப்பதால், ஹெச்.வினோத் விஜய்யின் கடைசி படத்தில் அவரை போலீஸ் அதிகாரியாகவே நடிக்க வைப்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜைகள் முடிந்து, படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில், இதுபோன்ற தகவல்கள் பரவுவதால், ஒருவேளை தளபதி 69 படத்தில் விஜய் போலீசாகத்தான் நடிக்க உள்ளாரோ என பலரும் சந்தேகத்தில் உள்ளனர்.

தளபதி 69 அறிவிப்பு

நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில், அவரது கடைசி படமான தளபதி 69ல் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோலும் நடிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தில், பிரேமலு நடிகை மமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் நடிக்க உள்ளதாக தளபதி 69 படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்தது.

தளபதி 69 லேட்டஸ்ட் ஆப்டேட்

இந்நிலையில், தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இப்படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சுயாதீன இசைக் கலைஞரும் நடிகருமான டீஜே அருணாச்சலம் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை டிஜே அருணாச்சலம் அவரது எக்ஸ் தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அந்தப் பதிவில், நான் நடிகர் விஜய்யுடன் நடிப்பது பற்றி கனவு கண்டேன். அது தற்போது பலித்திருப்பினும் நான் கனவு உலகத்தில் இருப்பது போன்றே இருக்கிறது. எனது ஆல் டைம் ஃபேவரிட்டான விஜய் சாருடன் நடித்து தளபதி 69 படத்தில் ஒரு அங்கமாக இருக்கிறேன் என சொல்வதில் பெருமையாக இருக்கிறது எனக் கூறியிருந்தார்.

மமிதா பைஜூவுக்கு ஜோடி

இந்தப் படத்தில் நான் நடிகை மமிதா பைஜூவிற்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் கூறினார். இந்நிலையில், தளபதி 69 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு அவர் நடிகர் விஜய், கேவிஎன் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் ஹெச். வினோத், இசையமைப்பாளர் அனிருத் போன்றவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவர் முன்னதாக அசுரன், பத்து தல போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதிர்ச்சி கொடுத்த விஜய்

தமிழ் திரைப்படத் துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த நடிகர் விஜய் கோலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் குறிப்பாக மலையாள ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். இவர், தற்போது தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தார். அத்துடன் நில்லாமல், இனி படங்களில் நடிக்கப் போவதில்லை எனவும் அறிவித்து அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்