Silambarasan: மூஞ்சில அடிச்சது மாதிரி.. சிம்பு மேல ஏன் இவ்வளவு வன்மம் - தருண் கோபி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Silambarasan: மூஞ்சில அடிச்சது மாதிரி.. சிம்பு மேல ஏன் இவ்வளவு வன்மம் - தருண் கோபி!

Silambarasan: மூஞ்சில அடிச்சது மாதிரி.. சிம்பு மேல ஏன் இவ்வளவு வன்மம் - தருண் கோபி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 01, 2024 06:24 AM IST

சில பேர் அதனை ரசிப்பார்கள். படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு படம் எடுக்கும் முறையில், ஏதாவது தவறாக நடந்தால், தனியாக கூப்பிட்டு முகத்திற்கு நேராகவே சொல்லி விடுவார். அப்போது எதிர்தரப்பில் அதிமேதாவியாக நினைத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அது சம்பட்டி அடியாக இருக்கும்.

சிலம்பரசன்!
சிலம்பரசன்!

இது குறித்து அவர் பேசும் போது, “சிம்பு என்னுடைய நண்பர். அவருக்கு தெரியாத கிராஃப்டே கிடையாது. நாம் ஒரு கதையை சொன்னோம் என்றால்.. அது எப்படி போகும் என்பதை அவர் சொல்லி விடுவார். அதனால்தான் அவருக்கு அவ்வளவு மாஸ் இருக்கிறது.

அவருக்கான ரசிகர்கள் இன்று வரை அவருடன் இருப்பதற்கு காரணம் அதுவே.. மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் திரைப்படத்தில்  சிம்பு நடித்துக்கொண்டிருந்த போது, எனக்கு ஒரு நாள் போன் செய்தார். 

அப்போது அவர், நான் ஊருக்குச்செல்கிறேன்.கதை ஏதாவது வைத்திருக்கிறாயா என்று கேட்டார். நாம் அடுத்தப்படம் செய்வோம்.. டிஷ்கஷனுக்கு வேண்டும் என்றால் பணம் அனுப்புகிறேன் என்றார். 

அதற்கு நான், அந்தளவுக்கு ஆண்டவன் என்னை விடவில்லை என்றேன். சிம்பு மீது வைக்கப்படும் விமர்சனங்களை பற்றி கேட்கிறீர்கள்.. அதற்கு காரணம் ஒரு 5 வயது குழந்தை 50 வயது மெச்சூரிட்டியுடன் பேசினால் பல பேருக்கு எரிச்சல்தான் வரும்.

சில பேர் அதனை ரசிப்பார்கள். படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு படம் எடுக்கும் முறையில், ஏதாவது தவறாக நடந்தால், தனியாக கூப்பிட்டு முகத்திற்கு நேராகவே சொல்லி விடுவார். அப்போது எதிர்தரப்பில் அதிமேதாவியாக நினைத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அது சம்பட்டி அடியாக இருக்கும்.

அவர்கள்தான் சிம்புவை பற்றி வெளியே தவறாக பேசுவார்கள். நான் கூட ஒரு மேடையில் சிம்புவை பற்றி தவறாக பேசி இருக்கிறேன். காளை படத்தில் ரோப் கட்டிக்கொண்டு குளத்தில் நடிக்கும் காட்சியின் போது சிம்பு அதனை கடிந்தார். அதை நான் தவறு என்று சொன்னேன். ஆனால் அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதை பின்னால் புரிந்து கொண்டேன்.

கதாநாயகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், அடுத்த நாள் ஷூட்ட்டிங் தடைபடும். அதன் காரணமாகவே அவர் அப்படி பேசினார்.” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.