அமரன் ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்க விரும்பும் திரையரங்க உரிமையாளர்கள்! ரெட் ஜெயண்ட் மூவிஸிற்கு பறந்த கடிதம்
தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அமரன் திரைப்படத்தை 8 வாரங்களுக்குப் பின் ஓடிடி தளத்தில் வெளியிடுமாறு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதி உள்ளனர்.

அமரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு குறைந்தபட்சம் 8 வாரங்கள் கடந்த பின் வெளியிட கோரிக்கை விடுத்து, ரெட் ஜெயண்ட் மூவிஸ், தயாரிப்பாளர் கமல் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
அமரன் ஒரு உதாரணம்
அந்தக் கடிதத்தில், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அமோகமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'அமரன்'. இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு வாழ்த்துகள். நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் குடும்ப ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வரும் என்பதற்கு அமரன் படம் மீண்டும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
ஓடிடி ரிலீஸை தள்ளி வையுங்கள்
திரையரங்க வெற்றியைப் போல வேறு எதுவும் ஒரு படத்தின் வெற்றியை நிரூபிப்பதில்லை. எனவே, திரையரங்கில் மக்களின் பேராதரவுடன் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் படத்திற்கு மதிப்பளித்து அமரன் படத்தின் ஓடிடியில் 8 வாரங்களுக்கு பிறகு வெளியிட வேண்டும்.