அஜித்தை வாழ்த்திய உதயநிதி! திராவிட மாடல் லோகோவை காட்டியதற்கு நன்றி சொல்லி வாழ்த்து!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி அஜித் குமார் அவர்களுக்கு அவரது பாராட்டை தெரிவித்து எக்ஸ் தள பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமாருக்கு 2025 வது வருடம் ஒரு சிறப்பான வருடமாக அமையப்போகிறது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த வருடம் குட் பேட் அட்லி மற்றும் விடா முயற்சி என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. இந்த கொண்டாட்டத்தையே அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு கூடுதல் நற்செய்தியாக அவரது ரேசிங் வெற்றி வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் நடந்த 24எச் 991 பிரிவு கார் ரேசிங் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து கோப்பையை வென்றது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அஜித்குமாரின் வீடியோக்களையும் ஷேர் செய்து அவரை பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி அஜித் குமார் அவர்களுக்கு அவரது பாராட்டை தெரிவித்து எக்ஸ் தள பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
உதயநிதி பாராட்டு
சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என தொடர்ந்து அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி அவரது எக்ஸ் தள பதிவில், "துபாயில் நடந்த 24எச் 991 பிரிவு ரேஸில் அஜித்குமார் மற்றும் அவரது அணி 3வது இடம் பிடித்துள்ளதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது அணியினரின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பந்தயத்தில் திராவிட மாடல் அரசின் தமிழக விளையாட்டுத்துறை லோகோவைப் பயன்டுத்தியதற்காக அஜித்குமார் ரேஸிங் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
