"லட்டுல வெச்சேன்னு நெனச்சியா தாஸ்".. ரிவியூவர்களுக்கு கடிவாளம் போட கோர்ட்டுக்கு போன புரொடியூசர்ஸ்..
படம் வெளியாகி 3 நாட்களுக்கு சோசியல் மீடியாக்களில் எந்தவொரு விமர்சனங்களும் வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளது.

தமிழ்நாட்டில் சில காலமாக அதிகரித்து வரும் சினிமா விமர்சனங்களால் தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றனர். இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து சில முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.
ரிவ்யூக்களுக்கு தடை கோரி மனு
தயாரிப்பாளர் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் ஒரு படம் வெளியாகி 3 நாட்களுக்கு பிறகு தான் எந்தவித விமர்சனங்களையும் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்கள் வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சோசியல் மீடியாவில் கண்டனம்
தயாரிப்பாளர் சங்கத்தினர் அளித்த இந்த புகார் வெளியில் தெரியவந்ததை அடுத்து, இது சோசியல் மீடியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விமர்சனங்களால் படம் தோல்வியை சந்திக்கிறது என கூறிவரும் நிலையில், தயாரிப்பாளர்கள் ரசிகர்களின் கருத்து சுதந்திரத்தையே பாதிக்கும் வகையிலான வேலையில் இறங்கி இருக்கின்றனர் எனக் கூறி வருகின்றனர்.