‘பாரதியார் என்ன சொல்லி இருக்கிறார்?’.. யோகிபாபுவிற்கு கத்தாரில் விருது! - யார் வழங்கி இருக்கிறார்? முழு விபரம் உள்ளே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘பாரதியார் என்ன சொல்லி இருக்கிறார்?’.. யோகிபாபுவிற்கு கத்தாரில் விருது! - யார் வழங்கி இருக்கிறார்? முழு விபரம் உள்ளே!

‘பாரதியார் என்ன சொல்லி இருக்கிறார்?’.. யோகிபாபுவிற்கு கத்தாரில் விருது! - யார் வழங்கி இருக்கிறார்? முழு விபரம் உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 27, 2024 04:56 PM IST

யோகிபாபுவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் விருது ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. அது என்ன விருது? எதற்காக இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

‘பாரதியார் என்ன சொல்லி இருக்கிறார்?’.. யோகிபாபுவிற்கு கத்தாரில் விருது! - யார் வழங்கி இருக்கிறார்? முழு விபரம் உள்ளே!
‘பாரதியார் என்ன சொல்லி இருக்கிறார்?’.. யோகிபாபுவிற்கு கத்தாரில் விருது! - யார் வழங்கி இருக்கிறார்? முழு விபரம் உள்ளே!

உலகளாவிய அளவில் சாதனைகள் புரிந்திட்ட தென்னிந்திய திறமையாளர்களை கௌரவிக்கும் SIGTA விருது, கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கத்தார் வாழ் தமிழர் சாதிக்பாஷா.

யோகிபாபு
யோகிபாபு

2024 ஆம் இந்த வருடம் கத்தாரின் தலைநகரான தோகாவில் உள்ள QNCC அரங்கத்தில் இந்த விழா நடைபெற்றது; இதில் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழில் திரையுலகில் நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல், காயத்ரி, ஜீவாரவி, ரியாஸ் கான், விச்சு, T.S.K , கன்னட திரையுலகில் நடிகையாக மிகப்பெரிய சாதனையை படைத்து அரசியலில் இருந்து வரும் சுமலதா மற்றும் தயாரிப்பாளர் நடிகர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. அம்மு மற்றும் அஸார் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

கத்தாரில் இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் கத்தார் அரசு அதிகாரிகள் பங்கேற்க, அனைத்து தமிழ்ச் சங்கங்களின் ஒத்துழைப்புடன், தமிழ், மலையாளம், கன்னட மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வில் சிறந்த தொழிலதிபர்கள் சிறந்த சமூக சேவகர்கள் என பல துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற ஸ்கூல் திரைப்பட விழாவில் பங்கேற்ற யோகிபாபு தான் இயக்க ஆசைப்படும் கதைக்களத்தைப் பற்றி பேசி இருந்தார்.

கவர்மெண்ட் ஸ்கூல் தான்.

அதில் அவர் பேசும் போது, ‘நான் படித்ததெல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல் தான். நான் படிச்ச ஸ்கூல் கதையைப் படமாக்கவேண்டுமென, பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன். வித்யாதரன் சார் மனது வைத்தால், கண்டிப்பாக அதைப் படம் செய்துவிடலாம். தாமு அண்ணனை பார்த்துதான் நான் நடிக்க வந்தேன்.  அவரோடு நடிக்க ஆசை, அண்ணா மீண்டும் நடிக்கலாம். இளையராஜா சார் என்றுமே அவர் தான் ராஜா. மிக அருமையான இசையைத் தந்துள்ளார். அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி.' என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.