Srithika Aaryaan : ‘என் முதல் மனைவியோடு சேர்த்து வைக்க முயற்சித்தார்.. என் முதல் கணவர் நல்லவர்’ ஸ்ரீதிகா-ஆர்யன் பேட்டி!
‘குடும்பத்தார், என் முதல் திருமணம் செட் ஆகாத போது வருந்தினார்கள். நான் காதலித்ததால் தான் அவர்கள் அந்த திருமணத்திற்கு ஒத்து வந்தார்கள். ஆனால், இந்த முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அடுத்த நான் திருமணம் செய்ய முயற்சித்த போது , அதையும் அவர்கள் புரிந்த கொண்டார்கள்’

Srithika Aaryaan Couple interview : பிரபல சீரியல் நட்சத்திரங்களான ஸ்ரீதிகா மற்றும் ஆர்யன் ஆகியோர் பரஸ்பரம் இரண்டாவது திருமணம் செய்துள்ளனர். இருவருக்கும் முதல் திருமணம் பொய்த்து போனாலும், பரஸ்பரம் காதலுடன் இரண்டாவது வாழ்க்கையை இனிதே தொடங்கியிருக்கிறார்கள். சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அவர்கள் இருவரும் அளித்த சுவாஸ்யமான பேட்டி இதோ:
‘முதல் மனைவியோடு சேர்த்து வைக்க முயற்சித்த இரண்டாவது மனைவி’
ஆர்யன் தனது புதிய வாழ்க்கை மற்றும் முந்தை வாழ்க்கை குறித்து பேசுகையில்: நாங்கள் முதன் முதலில் மியூசிக் வீடியோ ஒன்று ஏற்பாடு செய்தேன். அவங்க பாடுவாங்க, என்பதால், அவர்களுடன் இணைந்து செய்யலாம் என்று நினைத்தேன். அப்போது தான் நாங்கள் முதன்முதலில் சந்தித்தோம். முதலில் எங்களின் சந்திப்பு தொழில்முறை சந்திப்பாக தான் இருந்தது. நாங்க சீரியலில் இணையும் போது, எனக்கு எதிர்பாராததாக இருந்தது. இசை எங்களை இணைக்கும் விசயமாக இருந்தது. நாதஸ்வரம் சீரியலில் இருந்தே நடித்து வருகிறார். சீனியராக இருந்தாலும், அதை யாரிடமும் காட்டிக் கொள்ளமாட்டார். குடும்பத்தார் எங்கள் உறவை நீட்டிக்க விரும்பினர். என் முதல் திருமணம் காதல் திருமணம் தான். வாழும் போது தான், எங்களுக்குள் எதுவும் ஒத்துபோகவில்லை. இருவரும் சண்டைபோட்டு பிரியவில்லை; பரஸ்பரம் விருப்பத்துடன் தான் பிரிந்தோம்.
குடும்பத்தார், என் முதல் திருமணம் செட் ஆகாத போது வருந்தினார்கள். நான் காதலித்ததால் தான் அவர்கள் அந்த திருமணத்திற்கு ஒத்து வந்தார்கள். ஆனால், இந்த முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அடுத்த நான் திருமணம் செய்ய முயற்சித்த போது , அதையும் அவர்கள் புரிந்த கொண்டார்கள். அதன் பின் நானும் ஸ்ரீதிகாவும் நண்பர்களாக இருக்கும் போது, எங்களின் கடந்த காலங்களை நாங்கள் பேசிக்கொள்வோம். இன்னும் ஒருபடி மேலே போய், என் முதல் மனைவியுடன் என்னை சேர்த்து வைக்க ஸ்ரீதிகா கடுமையாக முயற்சி செய்தார், என்று ஆர்யன் கூறினார்.