சொகுசு கப்பல் வாங்கிய ஆல்யா மானசா! தலை சுற்ற வைக்கும் விலை! எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சொகுசு கப்பல் வாங்கிய ஆல்யா மானசா! தலை சுற்ற வைக்கும் விலை! எவ்வளவு தெரியுமா?

சொகுசு கப்பல் வாங்கிய ஆல்யா மானசா! தலை சுற்ற வைக்கும் விலை! எவ்வளவு தெரியுமா?

Suguna Devi P HT Tamil
Dec 10, 2024 11:55 AM IST

சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் ஆல்யா மானசா தற்போது ஒரு சொகுசு கப்பல் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொகுசு கப்பல் வாங்கிய ஆல்யா மான்சா! தலை சுற்ற வைக்கும் விலை! எவ்வளவு தெரியுமா?
சொகுசு கப்பல் வாங்கிய ஆல்யா மான்சா! தலை சுற்ற வைக்கும் விலை! எவ்வளவு தெரியுமா?

ஆல்யா மானசா 

முதன்முதலில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்னும் நட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஆழியா மானசா.  இவர் அந்த நடன நிகழ்ச்சிகளில் உடன் நடனமாடிய மானஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஆலியா மானசாவிற்கு விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து ராஜா ராணி சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமாகத் தொடங்கினார்.  இவர் நடித்திருந்த செம்பா கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் படி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் முன்னதாக காதலித்த மானசை பிரிந்து விட்டார். இதனையடுத்து ராஜா ராணி சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  ராஜா ராணி சீரியலை தொடர்ந்து திருமணம் ஆன பின்னர் இவர்களுக்கு ஆய்லா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னரும் மீண்டும் உடற்பயிற்சி மூலம் உடலை சரி செய்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார்.

 இதனை அடுத்து சீரியலில் நடிக்காமல் சில காலம் விடுப்பில் இருந்து வந்தார். மீண்டும் சன் டிவியில் இனியா சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். தற்போது சின்ன திரையில் மிகவும் பிரபலமான ஹீரோன்களில் இவரும் ஒருவர் ஆவார். மேலும் ஆலியா மானசா சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 50,000 சம்பளமாக பெறுவது குறிப்பிடத்தக்கது.

தொழில் தொடங்கிய தம்பதி

 சீரியல்களில் அதிகமாக சம்பதிக்கும் ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி சமீபத்தில் பல கோடி மதிப்பிலான வீடு ஒன்றை கட்டியிருந்தனர். தற்போது புதியதாக தொழில் ஒன்றை தொடங்கியுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா படகு சவாரி மற்றும் சொகுசு கப்பலுக்கு பிரபலமான ஒரு ஊராகும். இங்கு பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் ஆல்யா- சஞ்சீவ் ஜோடி சொகுசு கப்பல் ஒன்றை வாங்கி போட் ஹவுஸ் மூலம்  தொழிலை தொடங்கியுள்ளனர். இந்த சொகுசு கப்பலின் விலை ரூபாய். 2 கோடி என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆல்யா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.