Tamil Releases Rewind: சிவாஜியின் முதல் டபுள் ஆக்டிங்.. கமல்ஹாசனின் வசூல் வேட்டை - பிப்ரவரி 7 தமிழ் ரிலீஸ் ரீவைண்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Releases Rewind: சிவாஜியின் முதல் டபுள் ஆக்டிங்.. கமல்ஹாசனின் வசூல் வேட்டை - பிப்ரவரி 7 தமிழ் ரிலீஸ் ரீவைண்ட்

Tamil Releases Rewind: சிவாஜியின் முதல் டபுள் ஆக்டிங்.. கமல்ஹாசனின் வசூல் வேட்டை - பிப்ரவரி 7 தமிழ் ரிலீஸ் ரீவைண்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Feb 07, 2025 07:00 AM IST

Tamil Releases on Feb 7, Rewind: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 7ஆம் தேதி தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

சிவாஜியின் முதல் டபுள் ஆக்டிங்.. கமல்ஹாசனின் வசூல் வேட்டை - பிப்ரவரி 7 தமிழ் ரிலீஸ் ரீவைண்ட்
சிவாஜியின் முதல் டபுள் ஆக்டிங்.. கமல்ஹாசனின் வசூல் வேட்டை - பிப்ரவரி 7 தமிழ் ரிலீஸ் ரீவைண்ட்

உத்தம புத்திரன்

1940இல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய உத்தம புத்திரன் படத்தின் திரைக்கதையில் மாற்றங்களை செய்து சிவாஜி கணேசன் நடிக்க, டி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1958இல் வெளியாகி ஹிட்டடித்த படம் உத்தம புத்திரன். இந்த படத்தில் சிவாஜி கணேசன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

பார்த்திபன், விக்ரமன் என நல்லவன், கெட்டவன் என மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார். ஹீரோயினாக பத்மினி, ராகினி ஆகியோரும், எம்என் நம்பியார், கேஏ தங்கவேலு, ஓஎகே தேவர், கண்ணாம்பா உள்பட பலரும் நடித்திருப்பார்கள். சிவாஜி கணேசனை வசூல் மன்னனாக மாற்றிய இந்த படம் அந்த காலகட்டதிலேயே கோடிகளில் வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம்

உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான விஸ்வரூபம், 2013இல் வெளியாகிய நிலையில் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படமாக உள்ளது. நேடிரடியாக டிடிஎச் ப்ரீமியர் ஸ்கிரீனிங் தொடங்கி, இசுலாமியர்கள் எதிர்ப்பு வரை பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது இந்த படம். ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட சிக்கலால் தமிழ் படமான விஸ்வரூம் முதலில் தமிழ் நாடு தவிர தமிழ் மற்றும் தெலுங்கில் ஜனவரி 25ஆம் தேதியும், பின்னர் இந்தியல் பிப்ரவரி 1ஆம் தேதியும், கடைசியாக தான் தமிழ்நாட்டில் பிப்ரவரி 7ஆம் தேதியும் வெளியானது.

உலக அரசியல், குறிப்பாக ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் பற்றி பேசிய இந்த படம் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பியது. ரூ. 90 கோடி பட்ஜெட்டில் உருவான விஸ்வரூபம், பெயருக்கு ஏற்றார் போல் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவுக்கு பிரமாண்ட வெற்றியை கொடுத்தது.

புலிவால்

எதிர்நீச்சல் டிவி சீரியலில் தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த மறைந்த நடிகரும், இயக்குநருமான ஜி. மாரிமுத்து இயக்கிய இந்த படம் 2014இல் வெளியான கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான சாப்பா குரிஷு படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் மலையாளம் அளவில் ஓடவில்லை என்றாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பண்ணையாரும் பத்மினியும்

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பிரபலமான பண்ணையாரும் பத்மினியும் என்ற குறும்படத்தை அதே பெயரில் இயக்கி வெற்றி கண்டார் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார். 2014இல் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயப்பிரகாஷ், துளசி, பால சரவணன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

காமெடியும் காதலும் கலந்த படமாக இருந்த இது ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. அத்துடன் ஆறு தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்றது. விஜய் சேதுபதியின் சினிமா கேரியர் ஆரம்ப கட்டத்தில் அவருக்கு வெற்றியை தந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. கமல்ஹாசனின் கல்ட் கிளாசிக் சினிமாக்களில் ஒன்றாக விஸ்வரூபம் படம் அமைந்துள்ளது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.