Tamil Releases Rewind: நம்பியார் ஹீரோ அவதாரம்.. அஜித்தின் மூன்று முக்கிய படங்கள் - பிப்ரவரி 5 தமிழ் ரிலீஸ் ரீவைண்ட்
Tamil Releases on Feb 5, Rewind: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தையை ஆண்டுகளில் பிப்ரவரி 5ஆம் தேதிகளில் வெளியாகியிருக்கும் வெவ்வேறு ஹிட் படங்களின் லிஸ்ட் இதோ உங்கள் பார்வைக்கு.

பிப்ரவரி 5, 2025ஆம் தேதிக்கு முன் இதே பிப்ரவரி 5ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் அஜித்தின் மூன்று படங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியாகியுள்ளன. அதே இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படம், வில்லன் நடிகர் நம்பியார் ஹீரோவாக நடித்த படம் உள்பட பிப்ரவரி 5இல் முந்தைய ஆண்டுகளில் ரிலீஸ் ஆன சூப்பர் ஹிட் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு
நல்லதங்கை
1955இல் எஸ்.ஏ. நடராஜன் இயக்கத்தில் வெளியான அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து வந்த படம் நல்ல தங்கை. வில்லன் நடிகரான எம். என். நம்பியார் கதையின் நாயகனாக நடித்த இந்த படத்தில் டி.எஸ். பாலையா, மாதுரி தேவி, ராஜசுலோசனா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது
என் தங்கை கல்யாணி
டி.ஆர். ராஜேந்தர் இயக்கி, தயாரித்து, இசையமைத்து, நடித்த அண்ணன் - தங்கை பாசத்தை பற்றிய படம் என் தங்கை கல்யாணி. 1988இல் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட்டானது. படத்தில் சுதா ஸ்வர்ணலட்சுமி, ஸ்ரீதேவி, செந்தாமரை, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், ரேணுகா உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள். படத்தில் இடம்பிடித்திருக்கும் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தில் தனது மகனான சிம்புவை மகன் கதாபாத்திரத்திலேயே நடிக்க வைத்திருப்பார் டி. ராஜேந்தர். இதையடுத்து படத்துக்கு சிம்பு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதையும் வென்றார்