Tamil Movies Release Rewind: விஜய் கேரியரில் ட்ரினிங் பாயிண்ட்.. பிரபுவின் ரெமாண்ஸ் - பிப்., 15 தமிழ் ரிலீஸ் ரீவைண்ட்
Tamil Movies Release Rewind on Feb 15: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 15ஆம் தேதி தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

பிப்ரவரி 15, 2025க்கு முன், இதே பிப்ரவரி 15ஆம் தேதியில் பிரபுவின் ரெமாண்டிக் காமெடி படம், விஜய் கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய பூவே உனக்காக போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியான முக்கிய படங்கள் உங்கள் பார்வைக்கு
1.மீண்டும் ஒரு காதல் கதை
நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் இயக்கி நடித்து 1985ஆம் ஆண்டில் வெளியான படம் மீண்டும் ஒரு காதல் கதை. ராதிகா கதையின் நாயகியாக நடித்திருப்பார். சாருஹாசன், ஒய்.ஜி. மகேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் மூலம் நடிகராக இருந்து வந்த பிரதாப் போத்தன் இயக்குநராக அறஇமுகமானார். மூளை வளர்ச்சி குன்றிய இருவருக்கும் இடையிலான உறவு பற்றி கதையம்ச்சத்தில் உருவாகியிருந்த இந்த படத்தின் அப்போது வித்தியாசமான கதைக்களமாக பார்க்கப்பட்டது. இந்த படத்துக்காக பிரதாப் போத்தம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பிரதாப் போத்தன் - ராதிகா இடையே காதல் மலர்ந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் பெற்றனர். இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.
2.கன்னிராசி
இயக்குநர் பாக்யராஜ் உதவியாளராக இருந்த பாண்டியராஜன், இயக்குநராக அறிமுகமான கன்னிராசி 1985இல் வெளியானது. பிரபு, ரேவதி, கவுண்டமணி, சுமித்ரா, ஜனகராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் காமெடியும், காதலும் கலந்த சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருந்தது. இளையராஜாவின் இசையில் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மூடநம்பிக்கை விஷயத்துக்கு எதிராக கேள்வி கேட்கும் கதையம்சம் கொண்ட கன்னி ராசி படம், மனதை உருக்கும் க்ளைமாகஸுடன் முடிவடைந்திருக்கும். இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.
