ஓடிடி பக்கம் திசையை திருப்பவுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி.. தியேட்டரைப் போல ஓடிடியிலும் ஹிட் அடிக்குமா?
நடிகர் சசிகுமார்- சிம்ரன் நடிப்பில் வெளியான மக்கள் மனதை இலகுவாக்கச் செய்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஒரு காலத்தில் டோலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த சிம்ரன்முதல் முறையாக நடிகர் சசசிகுமாருடன் ஜோடி போட்டு நடித்ததிரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இந்தத் திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதே நாளில் நடிகர் சூர்யா நடித்த 'ரெட்ரோ' படமும் வெளியான போதிலும், இந்தப் படம் வசூல் பாதிக்காமல் நிலையாக சென்று சாதனை படைத்தது. இப்போது இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவஸ் வெளியாகியுள்ளது.
'டூரிஸ்ட் ஃபேமிலி' ஓடிடி ரிலீஸ் தேதி
இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம். ரூ.14 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இரண்டு வாரங்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்போது இந்தப் படம் டிஜிட்டல் பிரீமியருக்குத் தயாராகிவிட்டது. மே 31 முதல் ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
