Tamil Ott Release: சண்டே விடுமுறையை ஜாலியாக பொழுதை கழிக்க.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Ott Release: சண்டே விடுமுறையை ஜாலியாக பொழுதை கழிக்க.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

Tamil Ott Release: சண்டே விடுமுறையை ஜாலியாக பொழுதை கழிக்க.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 25, 2025 08:34 PM IST

Tamil Ott Release This Week: கடந்த டிசம்பரில் வெளியான படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வந்து கொண்டிருக்கின்றன. சண்டே விடுமுறையை ஜாலியாக பொழுதை கழிக்க, இந்த வாரம் ஓடிடியில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்டை பார்க்கலாம்.

சண்டே விடுமுறையை ஜாலியாக பொழுதை கழிக்க.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
சண்டே விடுமுறையை ஜாலியாக பொழுதை கழிக்க.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

அந்த வகையில் இந்த வீக்கெண்டில் பார்த்து ரசிக்க எந்ததெந்த படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளது என்பது பார்க்கலாம்.

தி ஸ்மைல் மேன்

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சரத்குமார் நடித்திருக்கும் 150வது தி ஸ்மைல் மேன். ஷ்யாம் பர்வின் இயக்கியுள்ள இந்த படம் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வரும் சரத்குமார், அவரது ஞாபகம் அழிவதற்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. இந்த படம் ஜனவரி 24ஆம் தேதி முதல் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

திருமணிக்கம்

சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் திருமாணிக்கம். நாடோடிகள் படப்புகழ் அனன்யா ஹீரோயினாக நடித்துள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அலங்கு

அறிமுக இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், ரெஜின் ரோஸ், ஸ்ரீலேகா ஆகியோர் நடித்துள்ள படம் அலங்கு.

டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டி.சபரீஷ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மகள் எஸ்.ஏ.சங்கமித்ரா தயாரித்துள்ள இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மனிதர்களுக்கு, நாய்களுக்கும் இடையிலான உறவு பற்றி பேசும் படமாக உள்ளது.

விடுதலை பார்ட் 2

வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணியில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியான படம் விடுதலை 2. கடந்த 2023இல் வெளியான விடுதலை பார்ட் 1 படத்தின் தொடர்ச்சியாக வெளியானது. இந்த பாகத்தில் மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். கிஷோர், போஸ் வெங்கட் உள்பட பலரும் நடித்துள்ளார். ரசிகர்கள் கவர்ந்த இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் விடியோவில் வெளியாகிறது.

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்

பரத், அபிராமி, ஷான், அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உள்பட பலர் நடித்து ஹைபர் த்ரில்லர் படமாக கடந்த டிசம்பர் 13ஆம் தேதி வெளியான இந்த படத்தை பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். வன்முறை காட்சிகள் நிறைந்த இந்த படம் சென்சாரில் ஏ சர்டிபிக்கேட் பெற்ற நிலையில் தற்போது ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சூதுகவ்வும் 2

மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் எஸ்.ஜி. இயக்கத்தில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி வெளியான படம் சூதுகவ்வும் 2. 2013இல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகமான வெளியான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் சூது கவ்வும் 2 படத்திலும் நடித்துள்ளனர். அரசியல் நய்யாண்டி காமெடி பாணியில் உருவாகியிருக்கும் சூது கவ்வும் அமேசான் ப்ரைம் விடியோவில் வெளியாகியுள்ளது.

பிற மொழி படங்கள்

மலையாளத்தில் வெளியான த்ரில்லர் படமான ரைபிள் கிளப், நெட்பிளிஸில் வெளியாகியுள்ளது. மலையாளம் தவிர தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ஸ்டிரீமிங் ஆகிறது.

அத்துடன் மாதவன் நடித்த ஹிசாப் பார்பர் என்ற இந்தி படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.