சிறப்பு காட்சிக்கு அனுமதி.. படத்தின் நீளம் குறைப்பு.. ரிலீஸிற்கு முன் விடுதலை 2 அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிறப்பு காட்சிக்கு அனுமதி.. படத்தின் நீளம் குறைப்பு.. ரிலீஸிற்கு முன் விடுதலை 2 அப்டேட்

சிறப்பு காட்சிக்கு அனுமதி.. படத்தின் நீளம் குறைப்பு.. ரிலீஸிற்கு முன் விடுதலை 2 அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 19, 2024 09:08 PM IST

விடுதலை 2 படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதே சமயத்தில் இயக்குநர் படத்தின் நீளத்தை குறைத்துள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

சிறப்பு காட்சிக்கு அனுமதி.. படத்தின் நீளம் குறைப்பு.. ரிலீஸிற்கு முன் விடுதலை 2 அப்டேட்
சிறப்பு காட்சிக்கு அனுமதி.. படத்தின் நீளம் குறைப்பு.. ரிலீஸிற்கு முன் விடுதலை 2 அப்டேட்

சிறப்பு காட்சிக்கு அனுமதி

இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், அரசியல் வசனங்கள், மூலக்கதை விவகாரம் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், விடுதலை 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, திரைப்படம் காலை 9 மணிக்கு தனது முதல் சிறப்புக் காட்சியைத் தொடங்குகிறது. மேலும் இந்தப் படம் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை என 5 காட்சிகள் வெளியிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியை மையப்படுத்தி கதை

விடுதலை படத்தின் முதல் பாகம் வனப்பகுதியில் காவலராக உள்ள நடிகர் சூரியை சுற்றியும் அவரது காதலை சுற்றியும் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் சூரி, பெருமாள் வாத்தியார் என்பவரை பற்றிய துப்பு கொடுப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், நாளை வெளியாகவுள்ள விடுதலை 2ம் பாகத்தில், மக்கள் விரும்பும் பெருமாள் வாத்தியார் யார்? அவரை ஏன் காவலர்கள் தேடுகிறார்கள் என்பது குறித்தும் விளக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் நீளம் குறைப்பு

விடுதலை 2 திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்தப் படத்தின் நீளத்தை குறைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் கூறி உள்ளார். இந்த வீடியோவை விடுதலை 2 படத்தின் நாயகன் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் படத்தின் 2 மணிநேரம் 52 நிமிடங்களாக இருந்த படத்தின் நீளத்தில் இருந்து 8 நிமிடங்கள் கட் செய்யப்பட்டுள்ளது. கடைசி நிமிடங்களில் தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் பணியாற்றியது பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளது எனக் கூறி இருந்தார்.

படத்தின் வெளியீட்டிற்கு அறிவுரை

முன்னதாக சென்சார் போர்டு விடுதலை 2ம் பாகத்திற்கு ஏ சான்றிதழ் அளித்தது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் வெற்றி மாறனுக்கு என தனியாக ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த சமயத்தில், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுகாதார குறைபாடுகள், கூட்ட நெரிசல், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெற தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜய்க்கு எதிரான வசனம்?

முன்னதாக, தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவாங்க என்கிற விடுதலை 2 ட்ரெய்லரில் வரும் வசனம் தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யை குறிப்பிடும் படி உள்ளதாக பல விமர்சனங்கள் எழுந்தது.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.