Happy Birthday AK : எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களைக் கவர்ந்தவர் அஜித் - அண்ணாமலை வாழ்த்து!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Happy Birthday Ak : எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களைக் கவர்ந்தவர் அஜித் - அண்ணாமலை வாழ்த்து!

Happy Birthday AK : எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களைக் கவர்ந்தவர் அஜித் - அண்ணாமலை வாழ்த்து!

Divya Sekar HT Tamil
May 01, 2024 01:58 PM IST

Happy Birthday AK : அஜித் பிறந்த நாளை முன்னிட்டு திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  வாழ்த்து
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

இந்நிலையில் நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவி ஷாலினி அவருக்கு பிறந்தநாள் பரிசாக 30 லட்சம் மதிப்பிலான பைக் வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித் பிறந்தநாளான இன்று அவரை சிறப்பிக்கும் பொருட்டு தீனா, மங்காத்தா, பில்லா ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில்” தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு, எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களைக் கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், நடிகர், சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மற்றும் பாலக்காடைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான சுப்ரமணியம் மற்றும் கொல்கத்தாவின் சிந்தியைச் சார்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக,மே1ஆம் தேதி 1971ஆம் ஆண்டு பிறந்தவர், அஜித் குமார். இவர் பிறக்கும்போது, ஹைதராபாத்தில் இவரது குடும்பத்தினர் இருந்தனர். இவரது அண்ணனின் பெயர் அனுப் குமார், இவர் ஒரு முதலீட்டாளராக இருக்கிறார். இவரது தம்பியின் பெயர் அனில் குமார், சென்னை ஐ.ஐ.டியில் படித்துவிட்டு தொழில் முனைவோராக உள்ளார்.

நடிகர் அஜித், 10ஆவது வரை ஏஸன் மெமரியல் சீனியர் செகண்டரி பள்ளி எனப்படும், சென்னையில் இருக்கும் பள்ளியில் படித்தார். அதன்பின் தொடர்ந்து படிக்கவில்லை. அஜித் என்ஃபீல்டு கம்பெனியில் மெக்கானிக் ஆவதற்காக ஆறு மாத காலப் பயிற்சி எடுத்தார்.

அதன்பின், தந்தையின் வற்புறுத்தலால் அப்பணியில் இருந்து விலகி, ஜவுளி எக்ஸ்போர்ட் செய்யும் கம்பெனியில் பணி செய்தார். அஜித்தின் அற்புதமான ஆங்கில அறிவால், அவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் நிறுவனத்தால் அனுப்பப்பட்டு, விற்பனையை விரிவாக்கம் செய்ய உதவினார். இந்த வேலையை விட்டபின், அஜித், தனது 3 பார்ட்னர்களுடன் சேர்ந்து, ஜவுளி விற்பனைப் பணியைத் துவக்கினார். அப்படியே மாடலிங்கிலும் வாய்ப்புகள் தேடி அலைந்தார். அப்போது ஒரு விளம்பரத்தில் அஜித்தை பார்த்த பி.சி.ஸ்ரீராம், அவரைப் பல்வேறு திரைப்படங்களுக்கு பரிந்துரை செய்தார்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரணும் அஜித்தும் கிளாஸ்மேட்ஸ். அந்த நட்பின் அடிப்படையில், பிரேம புஸ்தகம் என்னும் தெலுங்கு படத்தில் கமிட் ஆனார். ஆனால், அவர் தமிழில் அதற்கு முன்பே செல்வா இயக்கத்தில், ஹீரோவாக நடித்த ’அமராவதி’ திரைப்படம் 1993ஆம் ஆண்டு, ஜூன் 4ஆம் தேதி வெளியாகி நல்ல பெயரைப் பெற்றது. அதன்பின் அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்து மெல்ல தமிழ்சினிமாவில் கால்பதிக்கத் தொடங்கினார் அஜித் குமார்.

1996ஆம் ஆண்டு மட்டும் வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, காதல் கோட்டை ஆகியப்படங்கள் ரிலீஸாகின. இதில், இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த ’காதல் கோட்டை’ திரைப்படம் 250 நாட்கள் ஓடி, மிகப்பெரிய ஹிட்டானது.

முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், அசோகா, ரெட், வில்லன், அட்டகாசம், பரமசிவன், திருப்பதி, வரலாறு, பில்லா, ஏகன், மங்கத்தா ஆகியப் படங்கள் அஜித்தின் கேரியரில் முக்கியப் படங்களாக அமைந்தன. 50ஆவது படமான மங்கத்தா, அஜித்தின் படங்களிலேயே அப்போது அதிக வசூல்பெற்ற படமாகத் திகழ்ந்தது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

அதன்பின் ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகியப் படங்கள் அஜித்துக்கு மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் படங்களாக அமைந்தன. அஜித், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் 2025ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனத்தெரிகிறது.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.