தமிழ் சினிமா ரீவைண்ட்: முக்கோண காதல் கதை, நய்யாண்டி ரொமாண்டிக் காமெடி படம்.. ஏப்ரல் 25 முந்தைய ஆண்டில் ரிலீசான படங்கள்
ஏப்ரல் 25ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த நாளில் வெளியாகி கவனம் ஈரத்த முக்கோண காதல் கதை, நய்யாணடி ரெமாண்டி காமெடி உள்ளிட்ட மேலும் சில படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

ஏப்ரல் 25, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் நந்தா நடித்த புன்னகை பூவே, துல்கர் சல்மான நடித்த வாயை மூடி பேசவும் உள்பட சில படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
புன்னகை பூவே
சபாபதி இயக்கத்தில் நந்தா, ரேகா வேதாவியாஸ், காவேரி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி 2003இல் ரிலீசான படம் புன்னகை பூவே. நந்தா, ரேகா மீது காதல்வயப்பட, சில எதிர்பாராத குழப்பத்தால் ரேகாவின் தோழியான காவேரி, நந்தாவை காதலிக்க க்ளைமாக்ஸில் என்ன நடந்தது என்பதை முக்கோண காதல கதையாக சொன்ன படமாக புன்னகை பூவே படத்தின் கதை அமைந்திருக்கும். படத்தில் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஜாலியாக தொடங்கும் படத்தின் கதை பின்னர் எமோஷனலாக முடிவடையும் விதமாக திரைக்கதை அமைந்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. பெரிய ஸ்டார்கள் இல்லாத போதிலும் கதைக்காக ஓடிய படமாக புன்னகை பூவே இருந்தது.
