தமிழ் சினிமா ரீவைண்ட்: தமிழில் வந்த சிறந்த அரசியல் த்ரில்லர் படம்.. ஏப்ரல் 22 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
ஏப்ரல் 22ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் விஜயகாந்த் நடித்த ஆக்சன் கலந்த காமெடி படம் வெளியாகியுள்ளது. இது தவிர இந்த நாளில் வெளியாகி கவனம் ஈர்த்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

ஏப்ரல் 22, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விஜயகாந்த் நடித்த ஆக்சன் கலந்த காமெடி படமான தெற்கத்தி கள்ளன், மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் அரசியல் த்ரில்லர் படமான கோ, சசிக்குமார் நடித்த பேமிலி படமான வெற்றிவேல் உள்பட சில படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
தெற்கத்தி கள்ளன்
பி. கலைமணி இயக்கத்தில் விஜயகாந்த், ராதிகா இணைந்து நடித்து காமெடி கலந்த ஆக்சன் பாணியில் உருவாகி 1988இல் வெளியான படம் தெற்கத்தி கள்ளன். படத்தில் திராமத்து இளைஞனாக குடிமியுடன் தோன்றும் விஜயகாந்த் லுக் வித்தியாசமாக இருந்ததுடன், படத்தில் காமெடியில் பட்டையை கிளப்பும் விதமாக நடித்திருப்பார். தெலுங்கு சூப்பர் ஹிட்டான பானுமதி காரி மோகுடு படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் விஜயகாந்த் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், சராசரி ஹிட் படமாக அமைந்தது.
கோ
மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா நாயர், பியா பாஜ்பய், அஜ்மல் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து அரசியல் த்ரில்லர் படமாக 2011இல் ரிலீசாகி சூப்பர் டூப்பட் ஹிட்டான படம் கோ. தொடக்கம் முதல் க்ளைமாக்ஸ் வரை திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் உருவாக்கப்பட்டிருக்கும்.
படத்தில் ஜீவா போட்டோ ஜர்னலிஸ்டாக தோன்றி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஜீவா சினிமா கேரியரில் முக்கிய படமாக கோ அமைந்தது. முதலில் இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த நிலையில், சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால் அவர் படத்தை விட்டு விலக ஜீவா ஹீரோவான நிலையில், கோ ஜீவாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
படத்துக்கு பிரபல எழுத்தாளர்களான சுபா திரைக்கதை எழுதினார்கள். இயக்குநர் கே.வி. ஆனந்த் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சில பிரபல பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் போட்டோகிராபராக பணியாற்றியுள்ளார். அவரது பணி அனுபவத்தையும் படத்தில் சில காட்சிகளாக வைத்திருப்பார்.
மேலும் படிக்க: நடிரை முன்னாடி பேண்ட கழட்டி நிக்க வச்சு.. ஜீவா ஷேரிங்ஸ்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்து, ஆண்டின் சிறந்த ஆல்பமாக ஹிட்டாகின. ஹாரிஸ் ஜெயராஜின் சிறந்த பாடல்களில் கோ படத்தின் பாடல்களும் உள்ளன. படத்தில் இடம்பிடித்த அக நக என்ற பாடலில் சூர்யா, கார்த்தி, தமன்னா, ரவிமோகன், அஞ்சலி உள்பட 20க்கும் மேற்பட்ட பிரபல நடிகர் மற்றும் நடிகைகளை கேமியோ கேரக்டரில் தோன்ற வைத்திருப்பார்கள். அயன் பட வெற்றிக்கு பின்னர் கே.வி. ஆனந்துக்கு மற்றொரு ஹிட்டாக அமைந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பியது. தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் ரிலீசாகி அங்கும் வரவேற்பை பெற்றது. சிம்புவுக்கு மிகவும் காஸ்ட்லியான missஆக அமைந்த இந்த படம் தமிழில் வெளியான சிறந்த அரசியல் த்ரில்லர் படங்களில் ஒன்றாக உள்ளது.
விகடகவி
ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் புதுமுகம் சதீஷ், அமலாபால் நடித்து காமெடி படமாக உருவாகி 2011இல் வெளியான படம் விகடகவி. அமலாபால் ஹீரோயினாக நடித்த முதல் படமான இது தமாதமாக வெளியானது. இந்த படத்தின் ரிலீஸுக்கு முன் இவர் நடித்த மைனா வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான ஹீரோயின் ஆனார் அமலாபால். படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்த போதிலும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை
வெற்றிவேல்
வசந்தா மணி இயக்கத்தில் சசிக்குமார், பிரபு, மியா, நிகிலா விமல், வர்ஷா பொல்லம்மா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க பேமிலி படமாக 2016இல் ரிலீசானது வெற்றிவேல். தமிழில் நிகிலா விமல் அறிமுகமான படமாக உள்ளது. கலவையான விமர்சனங்களுடன் பி மற்றும் சி செண்டர்களில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் சராசரி வசூலையும் பெற்றது. டி. இமான் இசையில் பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல் பாடிய உன்னப்போல ஒருத்தன பார்த்தும் இல்லை என்ற பாடல் சிறந்த மெலடியாக சூப்பர் ஹிட்டானது.
