Tamil Movies Release Rewind: முழுக்க வேஷ்டி சட்டையுடன் ரஜினி..25வது ஆண்டில் கமல் கிளாசிக் படம்.. பிப்., 18 தமிழ் ரிலீஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies Release Rewind: முழுக்க வேஷ்டி சட்டையுடன் ரஜினி..25வது ஆண்டில் கமல் கிளாசிக் படம்.. பிப்., 18 தமிழ் ரிலீஸ்

Tamil Movies Release Rewind: முழுக்க வேஷ்டி சட்டையுடன் ரஜினி..25வது ஆண்டில் கமல் கிளாசிக் படம்.. பிப்., 18 தமிழ் ரிலீஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Feb 18, 2025 06:00 AM IST

Tamil Movies Release Rewind on Feb 18: படம் முழுக்க வேஷ்டி சட்டையுடன் ரஜினிகாந்த் வலம் வரும் படம், 25வது ஆண்டில் கமல் கிளாசிக் படம் என 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 18ஆம் தேதியில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

முழுக்க வேஷ்டி சட்டையுடன் ரஜினி..25வது ஆண்டில் கமல் கிளாசிக் படம்.. பிப்., 18 தமிழ் ரிலீஸ்
முழுக்க வேஷ்டி சட்டையுடன் ரஜினி..25வது ஆண்டில் கமல் கிளாசிக் படம்.. பிப்., 18 தமிழ் ரிலீஸ்

எஜமான்

மாஸ் படங்களில் நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் வெளியான கிளாஸ் படமான எஜமான் 1993 பிப்ரவரியில் வெளியானது. ரஜினிகாந்த் ஜோடியாக மீனா நடித்திருப்பார். நெப்போலியன் வில்லனாக நடித்திருப்பார். ஐஸ்வர்யா, எம்.என். நம்பியார், மனோரமா, கவுண்டமணி, செந்தில், விஜயகுமார் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் 175 நாள்கள் திரையில் ஓடி ஹிட் படமாக மாறியது.

இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டானது. காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என படத்தின் ரஜினியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் முழுக்க வேஷ்டி சட்டையில் ரஜினி தோன்றும் படமாக எஜமான் இருந்து வருகிறது.

கல்லூரி வாசல்

பவித்ரன் இயக்கத்தில் அஜித்குமார், பிரசாந்த், தேவையானி, பூஜா பட் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க 1996இல் வெளியான படம் கல்லூரி வாசல். பிரசாந்த் இந்த படத்தில் நீண்ட தலைமுடியுடன் பானிடெயில் ஹேர் ஸ்டைலில் தோன்றியிருப்பார். தேவா இசையில் படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றன.

லயோலா காலேஜ், என் மனதை கொள்ளயடித்தவளே போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த பாடல்களாக உள்ளன. இளைஞர்களை கவரும் விதமாக இருந்த திரைக்கதை இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது.

ஹேராம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த, அவரே முதல் முறையாக இயக்கி 2000ஆவது ஆண்டில் வெளியான படம் ஹேராம். ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், நஸ்ருதீன் ஷா, அதுல் குல்கர்னி, ஓம் பூரி, கிரிஷ் கர்ணாட் என மிக பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகி இருந்த இந்த படம் அப்போது பெரிய அளவில் கவனத்தை பெறவில்லை. ஆனால் தற்போது இந்த படத்தில் இடம்பிடிதிருக்கும் ஒவ்வொரு டீடெயிலிங் பற்றி தெரிய வருவதன் மூலம் கல்ட் கிளாசிக் படமாக கொண்டாடப்படுகிறது.

இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள், பின்னணி இசை என இரண்டும் காலத்தால் அழியாதவையாக இருக்கின்றன. தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றதோடு, பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ஹேராம் படம் இந்தியப் பிரிவினை, நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ளது. தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல் போல், படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், இப்போதும் கூட படம் பற்றி புதிய பொக்கிஷங்கள் கண்டறியப்பட்டு பிரமிக்க வைக்கின்றன. தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வரும் ஹேராம் வெள்ளி விழா ஆண்டை அடைந்துள்ளது

நடுநிசி நாய்கள்

கெளதம் மேனன் இயக்கத்தில் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியிருந்த நடுநிசி நாய்கள் 2011இல் வெளியானது. சமீரா ரெட்டி, தேவா, அஸ்வின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்துக்கு பின்னணி இசை இல்லாமல் ரியல் ஒலி அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும். சைக்கோ தனமாக நடந்து கொள்ளும் ஹீரோ பற்றி இந்த கதை சர்ச்சையை கிளப்பின. அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கெளதம் மேனன் இந்த படத்தை உருவாக்கியதாக கூறியிருந்தார்.

 

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.