தமிழ் சினிமா ரீவைண்ட்: எம்ஜிஆர் நடிப்பில் அட்டர் பிளாப்.. பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது - மார்ச் 13 ரிலீஸ் படங்கள்
தமிழ் சினிமா ரீவைண்ட்: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் மார்ச் 13ஆம் தேதி எம்ஜிஆரின் அட்டர் பிளாப் படம் ஒன்று வெளியாகியுள்ளது. கிளாசிக் முதல் லேட்டஸ்ட் வரை இந்த நாளில் ரிலீசான படங்களில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

மார்ச் 13, 2025க்கு முன், இதே மார்ச் 13ஆம் தேதி எம்ஜிஆர் - சரோஜா தேவி நடித்த அட்டர் பிளாப் படம், பிரகாஷ் ராஜ் அற்புதமான நடிப்பில் தேசிய விருது வென்ற படம் ஆகியவை வெளியாகியுள்ளது. அந்த வகையில் மார்ச் 12இல் முந்தைய ஆண்டுகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு
என் கடமை
எம்ஜஆர் - சரோஜா தேவி ஜோடியாக நடித்து எம். நடேசன் இயக்கத்தில் 1964இல் வெளியான படம் என் கடமை. படத்தில் கே. பாலாஜி, எம்.என். நம்பியார், எம்.ஆர். ராதா, நாகேஷ், எல். விஜயலட்சுமி, மனோரமா, சி.கே. சரஸ்வதி உள்பட பலரும் நடித்துள்ளார்.
எம்ஜிஆர் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை தழுவியது. வழக்கமான எம்ஜிஆர் படங்களில் இடம்பிடித்திருக்கும் காதல், ஆக்சன், செண்டிமெண்ட் காட்சிகள் என அனைத்தும் இடம்பிடித்திருந்தபோதிலும் ரசிகர்களை கவராமல் போனது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் யாரது யாரது என் அற்புத மெலடி பாடல் எம்ஜிஆரின் எவர்கீரின் கிளாசிக் பாடமாக மாறியுள்ளது. எம்ஜிஆர் உச்சத்தில் இருந்தபோது பிளாப் ஆன படமாக என் கடமை உள்ளது
நாங்கள்
ஹாசன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பிரபு, தீபிகா சிக்கிலா, ஜனகராஜ், ஸ்ரீவித்யா, சரத்பாபு, நாசர் உள்பட பலர் நடித்து பேமிலி ட்ராமா படமாக 1992இல் வெளியானது நாங்கள் படம். இரட்டை கொலை வழக்கின் விசாரணை்கு பின்னயில் இருக்கும் மர்ம முடிச்சுகள் தான் படத்தின் ஒன்லைன்.
விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட இந்த படம் சிவாஜி - பிரபு காம்போ நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த படங்களில் ஒன்றாக உள்ளது. படத்தில் சிவாஜி கணேசன் வெள்ளை தாடி, கருப்பு முடி என வித்தியாச லுக்கில் தோன்றியிருப்பார். கிளிச்சேவான காட்சிகள் ஏராளமாக இருந்தாலும் சிறந்து டைம்பாஸ் படமாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இளையராஜா இசையில் பாராடி குயிலே என்ற பாடல் வரவேற்பை பெற்றது.
காஞ்சிவரம்
பிரகாஷ் ராஜ், ஷ்ரேயா ரெட்டி, ஷம்மூ, விமல் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் 2008இல் வெளியான பீரியட் ட்ராமா படம் காஞ்சிவரம். காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளியின் வாழ்க்கை பயணத்தை கூறும் விதமாக அமைந்திருந்த இந்த படம் விமர்சகரீதியாக பாராட்டுகளை பெற்றது.
படத்தில் பிரகாஷ் ராஜ் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அத்துடன் இந்த படத்துக்காக பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகர் தேசிய விருதை வென்றார். அதேபோல் சிறந்த படத்துக்கான தேசிய விருதும் காஞ்சிவரம் படத்துக்கு கிடைத்தது. அதேபோல் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகையாக ஷம்மூ, சிறந்த படம் என மூன்று பிலிம்பேர் விருதுகளையும் வென்றது. படத்தின் மேக்கிங், பிரீயட் படத்துக்கான மேற்கொண்ட மெனக்கெடல்கள் வெகுவாக பேசப்பட்டது. பல்வேறு உலக திரைப்பட திருவிழாக்களிலும் திரையிடப்பட்டு பாராட்டை பெற்ற படமாக காஞ்சிவரம் உள்ளது
ராஜதந்திரம்
ஏ.ஜி. அமித் இயக்கத்தில் வீரா, ரெஜினா, தர்புகா சிவா, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்து ஹெஸ்ட் த்ரில்லர் படமாக 2015இல் வெளியான படம் ராஜதந்திரம். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப கொள்ளை சம்பவத்தை ராஜதந்திரமாக நிகழ்த்துவது தான் படத்தின் ஒன்லைன்.
படம் வெளியான சமயத்தில் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில் இன்னும் இரண்டாம் பாகம் உருவாகாமல் உள்ளது.

டாபிக்ஸ்