Tamil Movies Rewind: இளையராஜா இசையில் காலத்தால் அழியாத பாடல்கள்.. மார்ச் 20இல் ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட்
2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் மார்ச் 20ஆம் ஏராளமான தமிழ் சினிமாக்கள் வெளியாகி இருந்தாலும் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவுமில்லை. இந்த நாளில் வெளியாகியிருக்கும் சிறு பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் ரசிகர்களை கவர்ந்த இரண்டு படங்கள் பற்றி பார்க்கலாம்

மார்ச் 20, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியாகி இருக்கின்றன. மார்ச் 20இல் ரிலீசான தமிழ் படங்களில் ரசிகர்களை கவர்ந்த படங்களாக இருந்து வரும் மனசெல்லாம், தங்க மனசுக்காரன் என இரு படங்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு
தங்கமனசுக்காரன்
அறிமுக இயக்குநர் ராஜவர்மன் இயக்கத்தில் முரளி, சிவரஞ்சனி, எம்.என். நம்பியார், விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்து ரெமாண்டிக் படமாக 1992இல் வெளியானது தங்கமனசுக்காரன். இசைக்கலைஞராக இருந்து வரும் முரளி, சிவரஞ்சனி ஆகியோருக்கு சிறு வயதிலேயே காதல் ஏற்படுகிறது. ஆனால் காதலுக்கு பிரச்னை ஏற்பட ஊரை விட்டு செல்லும் முரளி, பின்னாளில் கிட்டாரிஸ்டாக திரும்பிகிறார். இதன் பின்னர் முரளி - சிவரஞ்சனி எப்படி இணைகிறார்கள் என்பது தான் படத்தின் கதை.
மேலும் படிக்க: காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்து நடிகர் முரளி
படத்தில் முரளி, சிவரஞ்சனி நடிப்பு, கவுண்டமணி - செந்தில் காமெடி ரசிக்கும் அம்சங்களாக இருந்தன. க்ளிஸேவாக கதையாக இருந்தாலும் இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து படத்தை ஹிட்டாக்கின.
மணிகுயில் இசைக்குதடி, பாட்டுக்குள்ளே பாட்டு, பூத்தது பூந்தோப்பு போன்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த படம் பெற்ற வெற்றியால் முரளி - இயக்குநர் ராஜவர்மன் கூட்டணி அடுத்த ஒரே ஆண்டில் மணிக்குயில், தங்ககிளி என இரண்டு படங்களில் பணியாற்றினார்கள்.
மேலும் படிக்க: தமிழ் சினிமா ஆல் டைம் ரெக்காட்டு படைத்த டாப் 5 படங்கள்
மனசெல்லாம்
அறிமுக இயக்குநர் சந்தேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், த்ரிஷா நடிப்பில் ரெமாண்டிக் படமான 2003இல் வெளியான படம் மனசெல்லாம். கொச்சின் ஹனீபா, நிழல்கள் ரவி, ஆனந்த், வையாபுரி, சுக்ரன் உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
த்ரிஷா மீது ஸ்ரீகாந்த் காதல் கொள்ள பின் இருவரும் காதலித்து வருகிறார்கள். மூளையில் நோய் வாய்ப்பட்டிருக்கும் த்ரிஷா விரைவில் இறந்துவிடுவார் என தெரிந்த பின்னர் அவர் வாழ இருந்து கொஞ்ச நாள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என ஸ்ரீகாந்த் விரும்பிகிறார். இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களும், இறுதியில் த்ரிஷாவுக்கு என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் இதே போன்ற கதையம்சத்தில் பல படங்கள் வந்திருக்கும் நிலையில், ரசிகர்களால் பார்த்து பழக்கப்பட்ட கதையாக இருந்ததால் மனசெல்லாம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. வையாபுரி, சுக்ரன் ஆகியோர் காமெடி கலந்த வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். படத்துக்கு மிக பெரிய ப்ளஸ் பாய்ண்டாக இளையராஜாவின் இசை அமைந்திருந்தது. சின்ன குயிலே, கையில் தீபம் ஏந்தி வந்தோம், நீ தூங்கும் நேரத்தில், ஒரு ஜோடி குயில் என பாடல்கள் அனைத்தும் படம் வெளியான காலகட்டத்தில் ரிப்பீட் மோடில் கேட்கப்பட்டன.
படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. ஸ்ரீகாந்த் , த்ரிஷா ஆகியோர் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் வெளியான இந்த படத்தில் இருவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
