Manidham: சுவாரஸ்யமான திரைக்கதை.. புதுச்சேரி நடிகர், நடிகைகள் மட்டும் நடிக்கும் தமிழ் படம்
Tamil Movie From Puducherry Actors: புதுச்சேரி நடிகர், நடிகைகள் மட்டும் நடிக்கும் தமிழ் படம் மனிதம் என்ற படம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவை கோலிவுட் என்று சினமாக்காரர்கள் அழைத்து வரும் நிலையில், தமிழ் சினிமாக்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களின் வாழ்வியலையும் அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. அத்துடன் தமிழ் சினிமாக்களின் தலைநகராக கோடம்பாக்க இருந்து வருகிறது. இங்குதான் பல்வேறு சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் வசித்து வருகிறார். சினிமா தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இங்கு தான் உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டுடன் இணைந்து இருக்கும் யுனியன் பிரதேசமான புதுச்சேரி பிரஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும், அங்கும் தமிழர்களே அதிகமாக வசித்து வருகிறார்கள். எனவே தனி மாநிலமாக நிர்வாக ரீதியாக மட்டுமே கருதப்படும் புதுச்சேரி மக்களுக்கும் கோலிவுட் படங்கள் பிரதான பொழுதுபோக்காக இருந்து வருகிறது.
ஆனால் முற்றிலும் புதுச்சேரி நடிகர்கள் நடித்து, அந்த மண்ணில் வைத்தே படமாக்கப்பட்ட சினிமாவாக மனிதம் என்ற படம் உருவாகியுள்ளது.