தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  56 Years Of Athey Kangal: கண்களை வைத்தே திகிலூட்டிய படம் - ஒரே வாரத்தில் உருவான அதே கண்கள் கதை

56 Years of Athey Kangal: கண்களை வைத்தே திகிலூட்டிய படம் - ஒரே வாரத்தில் உருவான அதே கண்கள் கதை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 26, 2023 08:20 AM IST

இந்தி படத்துக்காக போடப்பட்ட வீடு செட்டின் பிரமாண்டத்தை பார்த்து மிரண்டு போன இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர், அந்த வீட்டிலேயே முழுக்க படமாக்கும் விதமாக ஒரே வாரத்தில் த்ரில்லர் கதை ரெடி செய்தார். அதுதான் தமிழ் சினிமாவில் சிறந்த த்ரில்லர்களில் ஒன்றாக இருக்கும் அதே கண்கள் படமாக உருவானது.

தமிழ் சினிமாவின் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றான அதே கண்கள்
தமிழ் சினிமாவின் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றான அதே கண்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

பேமிலி எண்டர்டெயின்மென்ட் படங்களின் இயக்குநர் என்ற பெயர் பெற்ற ஏ.சி. திருலோசந்தர் இயக்கிய இந்த படத்தில் ரவிச்சந்திரன், கஞ்சனா பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், எஸ்வி ராமதாஸ் உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தில் சர்ப்ரைஸ் விஷயமாக, வில்லன் போன்றே காட்டப்படும் அசோகன் பாஸிடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படம், அவர்களது தயாரிப்பில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கை போடு போட்ட மெஹர்பன் என்ற படத்துக்காக பிரமாண்ட வீடு ஒன்றை செட்டாக தங்களது ஸ்டுடியோவில் அமைத்திருந்தனர். அதன் அழகியலை கண்டு பிரிக்க விரும்பாத ஏ.வி.எம். செட்டியார் அந்த வீட்டை அப்படியே வைத்திருந்தார்.

இதை பார்த்த இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர், இந்த வீட்டினுள் வைத்தே முழு படமும் நடக்கும் விதமாக த்ரில்லர் கதையை உருவாக்கினார். ஒரு பணக்கார வீட்டில் நடக்கும் அடுத்தடுத்த கொலைகள், அதன் பகீர் பின்னணியில் ஒரு சோகமான பிளாஷ்பேக்தான் படத்தின் கதை.

முகமுடி அணிந்து கொலை செய்யும் கொலையாளியின் கண்களை மட்டும் பார்த்திருக்கும் நாயகன் ரவிச்சந்திரன் இறுதியில் அவனை கண்டுபிடிக்கும் இடத்தில் வைத்திருக்கும் டுவிஸ்ட் அப்போது ரசிகர்களை புதுமையான அனுபவத்தை கொடுக்கும் விதமாக அமைந்திருந்தன.

ஹீரோயின் அல்லது வேறு எதாவது கேரக்டர் ஓ என கத்தும் டெம்ப்ளே காட்சி அதிகம் நிறைந்த முன்னோடி படம் இருக்கும் அதே கண்கள் படத்தில் நாகேஷ் பெண் வேஷயத்தில் காமெடியில் அதகளம் செய்திருப்பார்.

ஒரே வாரத்தில் உருவான அதேகண்கள் படத்தின் கதை, ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டது. வேதா இசையமைத்திருந்த இந்த படத்தில் பொம்பள ஒருத்தி, எத்தனை அழகு, பூம் பூம் மாட்டுக்காரன், வா அருகில் வா, கண்ணுக்கு தெரியாதா போன்ற பாடல்கள் ஹிட்டாகின.

பிளாக் அண்ட் ஒயிட் படங்கள் கோலோச்சியிருந்த அந்த காலகட்டத்தில் பிரமாண்ட் செட்டின் அழகை காட்டும் விதமாக கலர் படமாக எடுக்கப்பட்டு வெளியானது. ரவிச்சந்திரன் சினிமா கேரியரில் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் அள்ளிய படமாகவும் இருக்கும் அதே கண்கள் வெளியாகி இன்றுடன் 56 ஆண்டுகள் ஆகிறது.

தமிழில் வெளியான த்ரில்லர் படங்களில் அதேகண்கள் படத்துக்கு தனியொரு இடம் உண்டு என்பதை உறுதியாக கூறலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்