ஆசிரியர் டூ சினிமா.. ஜோதிடம், பெரியாரிசம் பேசும் மனிதர்.. தமிழ் சினிமாவின் இயற்கையான நடிகர் ராஜேஷ்
ஆசிரியர் டூ சினிமா பயணம் மேற்கொண்ட ராஜேஷ் ஜோதிடம் மற்றும் பெரியாரிசம் என இரண்டையும் இரு கண்கள் போல் பாவித்து வந்துள்ளார். தமிழ் சினிமாவின் இயற்கையான நடிகர் என பெயரெடுத்த ராஜேஷ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
தனித்துவமான குரல், சந்தமான தோற்றம், அமைதியான பேச்சு என சினிமாக்களில் மதிப்புமிக்க கதாபாத்திரங்களில் தோன்றி முத்திரை பதித்தவர் நடிகர் ராஜேஷ். தமிழ், மலையாளம் மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, குணச்சித்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்த நடிகராக உள்ளார்.
ஆசிரியர் டூ சினிமா பயணம்
தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ் பிறந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில். பள்ளிப்படிப்பை திண்டுக்கல், தேனி என முடித்துவிட்டு சென்னைக்கு கல்லூரி படிப்பை படிக்க வந்துள்ளார். கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்காத போதிலும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
இயக்குநர் மகேந்தரினின் உறவினரான இவருக்கு, சினிமா மீதான அறிமுகம் கிடைத்தது. தனது சாந்தமான தோற்றத்தால் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து 1979இல் வெளியான கன்னிப்பருவத்திலே படம் மூலம் ஹீரோ ஆனார்.
அதன்பிறகு ஹீரோவாக நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தனக்கென பெயரையும், ரசிகர் கூட்டத்தை பெற்றார்.
மறக்க முடியாத படங்கள்
ராஜேஷ் நடிப்பில் ரசிகர்கள் மனதில் நீங்காத கதாபாத்திரங்கள் பல இருக்கின்றன. அந்த ஏழு நாட்கள் படத்தில் அம்பிகாவின் கணவர், பயணங்கள் முடிவதில்லை, மெட்டி, வானமே எல்லை, பொன்னுமணி, இருவர், சிட்டிசன், கோவில், ஆட்டோகிராப் என சொல்லிக்கொண்டே போகலாம்.
கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கும் ராஜேஷ், நடிப்பில் முத்திரையும் பதித்துள்ளார். கமலின் கல்ட் கிளாசிக் படமான சத்யா படத்தில் வில்லனத்தனம் கொண்ட அரசியல்வாதி, மகாநதி படத்தில் கமலுக்கு ஆதரவாக நிற்கும் சிறைக்காவலர் என தனது தனித்துவமான நடிப்பில் மின்னி இருப்பார்.
மலையாள நடிகர்களான முரளி, நெடுமுடி வேணு ஆகியோருக்கு டப்பிங் கலைஞராகவும் செயல்பட்டுள்ளார். சினிமா தவிர டிவி சீரியல்களிலும் நடித்திருக்கும் ராஜேஷ் சன் டிவியில் புகழ் பெற்றி தொடர்களான அலைகள், ஆண் பாவம், ரோஜா, பூவே உனக்காக போன்றவற்றில் நடித்துள்ளார். விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
ஜோதிடமும், பெரியாரிசமும்
கிறிஸ்தவரான ராஜேஷ் நாத்திகவாதியாகவும், பெரியார் கொள்கைள் மீது பற்றி கொண்டவராகவும் இருந்துள்ளார். ஆசிரியராக பணியாற்றியவர் என்பதால் வாசிப்பில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த ராஜேஷ் ஜோதிடத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறை தொடர்பாக பல்வேறு புத்தகங்களும், கட்டுரைகளும் எழுதி புகழ் பெற்றார். கார்ல் மார்க்ஸ் தீவிர ஆதரவாளராக திகழ்ந்த இவர் தற்போது சினிமாவுடன் இணைந்து தொழிலதிபராகவும் வலம் வருகிறார். ஜோதிடத்தையும், பெரியாரிசத்தையும் இரு கண்கள் போல் பாவித்து வந்துள்ளார்.
சென்னையில் சினிமா ஷுட்டிங்குக்காக பிரத்யேகமாக பங்களா ஒன்றை கட்டிய முதல் நடிகர் என்ற பெருமை ராஜேஷிடம் உள்ளது. கே.கே, நகரில் அவர் கட்டிய பங்களாவில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழியை சேர்ந்த ஏராளமான படங்களும் ஷுட்டிங் செய்யப்பட்டது.
யூடியூப் சேனல்கள் மூலம் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வந்ததோடு, சரிந்திரம் என்ற பெயரில் பிரபலங்களை பேட்டியெடுத்து புகழ் பெற்றார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதை பெற்றதுடன், திரைத்துறையில் எதார்த்தம் மிகக் நடிகர், இயற்கையான நடிகர் என்று பாராட்டுகளை ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள்