“நின்னுக்கோரி வரனம்,பாலிருக்கி பழமிருக்கி” தமிழ் சினிமாவில் மதிப்புமிக்க குணச்சித்திர வேடங்களின் நடிகர் எல்ஐசி நரசிம்மன்
தமிழ் சினிமாவில் மதிப்புமிக்க குணச்சித்திர வேடங்களில் தோன்றிய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் எல்ஐசி நரசிம்மன். கவுண்டமணியுடன் இணைந்து இவர் நடித்த “நின்னுக்கோரி வரனம்,பாலிருக்கி பழமிருக்கி” சிறந்த கிளாசிக் காமெடியாக இருந்து வருகிறது.

சிறுவயதில் குழந்தைகளிடம், பெரியவர்கள் பொதுவாக கேட்கும் கேள்வியாக, "நீ வளர்ந்த பின் டாக்டர், என்ஜினியர், போலீஸ், வக்கீல் இவர்களில் யாராக ஆக விருப்பம்" என்பது தான். அப்படி சிறுவயது ரோல் மாடலாக இருக்கும் கதாபாத்திரங்களுக்கு என தன்னை சினிமாக்களில் பொருத்தி கொண்டவராக நடிகர் எல்ஐசி நரசிம்மன் இருந்துள்ளார். குணச்சித்திர நடிகராக சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், பெரும்பாலான படங்களில் போலீஸ், நீதிபதி, டாக்டர் போன்ற பலரின் சிறுவயது ரோல் மாடல் கேரக்டர்களிலேயே தோன்றியுள்ளார்.
எல்ஐசி நரசிம்மன் கலைப் பயணம்
கோவை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் எல்ஐசி நரசிம்மன். இவரது நிஜ பெயர் விஎல் நரசிம்மன். சிறு வயது மீது கலை ஆர்வம் மிக்கவராக இருந்த இவர் பள்ளியில் படித்தபோதே நாடகங்களில் தவறாமல் நடிப்பவராக இருந்துள்ளார். இவரது கலை ஆசைக்கு பெற்றோர்கள் தடை போட படிப்பில் கவனம் செலுத்தி பட்டம் பெற்றதோடு சென்னை வந்த எல்ஐசி நிறுவனத்தில் வேலை கிடைத்து பணிபுரிந்தார்.
நடிகை சந்திரகாந்தா நடத்தி வந்த சிவகாமி கலைமன்றம் நாடக குழுவின் இணைந்த எல்ஐசி நரசிம்மன், காலையில் வேலை, மாலையில் நாடகம் என இருந்து வந்துள்ளார். நாடகங்களில் பெரும்பாலும் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்றி கவனத்தை ஈரத்த நரசிம்மன், பின்னர் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் நாடக ட்ரூப்பின் இணைந்து பல்வேறு நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.