சில்க்கு இல்லனா விசித்ரா.. 90ஸ் சினிமாக்களின் ஐட்டம் டான்ஸர், கவர்ச்சி பாவை.. ரசிகர்களை கட்டிப்போட்ட காந்தகண்ணழகி
90ஸ் சினிமாக்களின் ஐட்டம் டான்ஸர், கவர்ச்சி பாவையாக வலம் வந்தவர் விசித்ரா. அப்போது சில்க் கால்ஷீட் இல்லன்னா என்ன விசித்ரா இருக்கிறார் என சொல்லும் அளவுக்கு ஐட்டம் டான்ஸராக கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாக்களில் க்ளாமர் குயினாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்த நடிகை விசித்ரா. சில்க் ஸ்மிதா கால்ஷீட் இல்லாதவர்கள் அவரை போல் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்படும் நடிகையாக திகழ்ந்த விசித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என தென்னிந்திய சினிமாக்களில் 90ஸ் காலகட்டத்தில் ஒரு ரவுண்டு வந்தார். ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்த இவர் கவர்ச்சி நடிகையாக முத்திரை பதித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
சினிமா பயணம்
சென்னையில் வசித்து வந்த விசித்ரா ஒரிஜினல் பெயர் ஜெயந்தி. இவரது தந்தையான வில்லியம்ஸ் மேடை நாடக கலைஞராகவும், சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தராகவும் இருந்துள்ளாராம். கமல்ஹாசனுடன் மனிதரில் இத்தனை நிறங்களா, அர்ஜுனுடன் தாய் மேல் ஆணை உள்ளிட்ட சில படங்களிலும் வில்லியம்ஸ் நடித்துள்ளார்.
விசித்ரா பள்ளி படிப்பை படிக்கும்போது தந்தை வழியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. டீன் ஏஜ்ஜில் இருக்கும்போதே சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் விசித்ரா. இவரது முதல் படமான பொற்கோடி திரைக்கு வரவல்லை.
விசித்ராவை முதன் முதலில் திரையில் காண்பித்த படம் சின்னதாயி. இதன் பின்னர் தலைவாசல் படத்தில் மடிப்பு ஹம்சா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி பிரபலமானார். சாராய கடை வியாபாரியாக இவரது நடிப்பு பேசப்பட்டது.
ஐட்டம் டான்சர், கவர்ச்சி கதாபாத்திரங்கள்
இதைத்தொடர்ந்து அஜித்தின் அமராவதி படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனமாடினார். அதேபோல் சபாஷ் பாபு, எங்க முதலாளி, ஜாதி மல்லி போன்ற படங்களிலும் காமெடி, வில்லத்தனம் பொருந்திய கதாபாத்திரங்களில் நடித்தார்.
ஐட்டம் பாடலில் தோன்றி புகழ்பெற்ற இவருக்கு தொடர்ந்து அதேபோன்ற வாய்ப்புகள் அமைய அதை ஏற்றுக்கொண்டு தனது நடிப்பில் முத்திரை பதித்தார். சில்க் இல்லேனா என்ன விசித்ரா இருக்கிறார் என தங்களது படங்களில் வரும் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் டிக் அடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் என டாப் நடிகர்களின் படங்களில் நடித்தார். சத்யாராஜின் பல படங்களில் ஐட்டம் டான்ஸ், வில்லி போன்ற கதாபாத்திரங்களில் தோன்றினார். கவர்ச்சிகராமான கதாபாத்திரங்களில் நடித்ததால் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
காதல் திருமணம்
சினிமாக்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும்போதே திடீரென காணாமல் போனார். விசித்ரா திருமணமாக மைசூரில் செட்டிலாகிவிட்டதாக தகவல்களும் வெளியாகின. தெலுங்கு பட ஷுட்டிங்கின்போது கேரளா மாநிலம் பாலக்காடில் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அப்போது அந்த மேனேஜருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாகி, காதலாகி அவரை திருமணம் செய்து கொண்டார். விசித்ராவுக்கு மூன்று மகன்கள் இருக்கும் நிலையில், திருமணத்துக்கு பிறகு கணவருடன் இணைந்து ஹோட்டல் பிசினஸை கவனித்து வந்துள்ளார்.
சீரியலில் கம்பேக், பிக் பாஸில் பிரபலம்
இதையடுத்து 2018இல் சன்டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற சீரியல் மூலம் மீண்டும் நடிப்புக்கு கம்பேக் கொடுத்தார் விசித்ரா. சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விசித்ரா, விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பெரிதாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்து வந்த விசித்ரா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை பற்றியும், சினிமாவுக்கு வந்ததது, சினிமாவில் சந்தித்த பாலியல் சீண்டல்கள், காதல் திருமணம் என பல்வேறு விஷயங்களை பேசினார். விசித்ராவின் கதை பலரது மனதையும் கரைய வைக்கும் விதமாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளில் நுழைந்து 98 நாள்கள் வரை தாக்குபிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் விசித்ரா தனது வாழ்க்கை குறித்து, தனது சினிமா பயணங்கள் குறித்து பேசி வருகிறார். குறிப்பாக மீடு பற்றி அதிகம் பேசி வருவதோடு, பெண்கள் தங்களுக்கு நிகழும் துன்புறுத்தல்கள் பற்றி தைரியமாக வெளியே சொல்ல வேண்டும் எனவும் கூறி வருகிறார்.
நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் இருந்து வரும் விசித்ரா ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார். சினிமாவில் ஹீரோயின் ஆக ஆசைப்பட்டு கவர்ச்சி பாவையாக ரசிகர்களை மகிழ்வித்த விசித்ராவுக்கு இன்று பிறந்தநாள்