Found Footage: பயமுறுத்தும் லுக்குகள்’ ‘தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் படமா வருது..’ - மர்மர் டீம் பேட்டி!
Found Footage Movie: ‘கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில்..’ - மர்மர் டீம் பேட்டி!

சர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்ற "பாராநார்மல் ஆக்டிவிட்டி" மற்றும் "தி பிளெய்ர் விட்ச் பிராஜெக்ட்" போன்ற திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட சினிமா ரசிகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க இதுவே சரியான நேரம். ஆம், ஃபவுண்ட் ஃபுட்டேஜ் (Found Footage) ஜானரில் எடுக்கப்பட்ட இதுபோன்ற திரைப்படங்கள் பலத்தரப்பட்ட ரசிகர்களுக்கு சுவாரசியமான திரை அனுபவத்தை வழங்கியுள்ளன.
தமிழ் சினிமாவும்
இந்த மாதிரி எடுக்கப்படும் திரைப்படங்கள் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து வரவேற்பையும் பெற்றுள்ளன. இந்த வரிசையில், தற்போது தமிழ் சினிமாவும் இந்த அற்புத ஜானரில் இணைந்துள்ளது. தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் திரைப்படமாக "மர்மர்" என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தின் லுக்குகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
என்ன சொல்கிறது படக்குழு
புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறது.
தொழில்நுட்பக் குழு விவரம்:
ஒளிப்பதிவு: ஜேசன் வில்லியம்ஸ்
ஒலி வடிவமைப்பு: கெவின் ஃபிரடெரிக்
படத்தொகுப்பு: ரோஹித்
தயாரிப்பு வடிவமைப்பு: ஹாசினி பவித்ரா
சிறப்பு ஒப்பனை: செல்டன் ஜார்ஜ்
ஆடை வடிவமைப்பு: பிரகாஷ் ராமச்சந்திரன்
கலரிஸ்ட்: ரகுராமன்
மேலாளர்: நாகராஜன்
நிர்வாக தயாரிப்பாளர்: பிரவீன் குமார்
விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக்
மக்கள் தொடர்பு: ஸ்ரீவெங்கடேஷ்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்