Today OTT Release: ஓடிடியில் வரிசை கட்டி நிற்கும் கோலிவுட் படங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய படங்களை எங்கு காணலாம்?
Today OTT Release: கோலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சில படங்கள் மார்ச் 21 ஆம் தேதியான இன்று ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன.

Today OTT Release: இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் தமிழ் திரைப்படங்கள் குவிந்துள்ளன. ஓடிடியில் தமிழ் திரைப்படங்களைப் பார்க்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஒரே நாளில் (மார்ச் 21) 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற டிராகன், ரசிகர்கள் எதிர்பார்த்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உள்ளிட்ட திரைப்படங்களும் ஸ்ட்ரீமிங்கிற்குத் தயாராக உள்ளன. இந்நிலையில், என்னென்ன திரைப்படங்கள், எங்கெங்கே ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
டிராகன்
பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த டிராகன் திரைப்படம் இன்று (மார்ச் 21) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்தது. ரூ.150 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றி பெற்ற இந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ஸ்ட்ரீமிங்க் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படம் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியான டிராகன் (தெலுங்கில் ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்) சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு மார்ச் 21 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி-யில் வெளியானது. அஸ்வின் மாரிமுத்து இயக்கிய இந்த திரைப்படத்தில் பிரதீப் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், காயடு லோஹர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
