Producer Jayamurugan: மாரடைப்பால் உயிரிழந்த தயாரிப்பாளர் ஜெயமுருகன் யார்? அவரது படங்கள் என்ன?
Producer Jayamurugan Died: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முக கலைஞராக வலம் வந்தவர் ஜெயமுருகன். பெரிய ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் இவரது படம் ரிலீஸ் காலகட்டத்தில் கவனம் பெற்ற படங்களாக இருந்தன.

மாரடைப்பால் உயிரிழந்த தயாரிப்பாளர் ஜெயமுருகன் யார்?
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளராக வலம் வந்தவர் டி.என். ஜெயமுருகன். தனது சொந்த ஊரான திருப்பூரில் வசித்து வந்த இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழப்பு
சினிமாவை விட்டு விலகி இருந்து வந்த ஜெயமுருகன், திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜெய முருகனின் உடல் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயமுருகனின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்வர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.