ஏன் பயப்பட வேண்டும்? எல்லாமே பொய்.. ஆர். கே. செல்வமணிக்கு எதிராக கிளம்பிய தயாரிப்பாளர்கள்..
ஆர். கே. செல்வமணிக்கு எதிராகவும் அவர் கூறும் கருத்துக்களுக்கு எதிராகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் காட்டமான அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு ஆர் கே செல்வமணி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினை பற்றி மீண்டும் அவதூறாக பேசியதாகக் கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சில நாட்களாகவே தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் ஆர். கே. செல்வமணிக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது .
சங்கம் உறுதுணையாக நிற்கும்
அந்த அறிக்கையில், " தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக தாய் சங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உள்ள எல்லா சங்கங்களிலும் அதிருப்தி அடைந்திருக்கும் பல உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதுணையாக நிற்கும்.
தரம் தாழ்ந்த பேச்சு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது ஒரு தனிமைப்பு அதேபோல் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்பது ஒரு தனி அமைப்பு என்ற அர்த்தத்தில் தான் நாங்கள் கூறினோம் என்பதை ஆர்கே செல்வமணி அவர்கள் நன்கு புரிந்து இருந்தும் அது தவறாக புரிந்து கொண்ட மாதிரி வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக, புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கூட்டமைப்பு பற்றி தரம் தாழ்ந்து சொல்லி இருப்பது அனைத்து தொழிலாளர்களையும் அவமதிக்கும் செயலாகும்.
