Manoj Bharathiraja: ‘ஈச்சி எலுமிச்சி..’ தொலைந்து போன கனா..பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manoj Bharathiraja: ‘ஈச்சி எலுமிச்சி..’ தொலைந்து போன கனா..பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்!

Manoj Bharathiraja: ‘ஈச்சி எலுமிச்சி..’ தொலைந்து போன கனா..பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 25, 2025 08:20 PM IST

பாரதிராஜாவின் மகனும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா காலமானார்

Manoj Bharathiraja: பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்!
Manoj Bharathiraja: பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்!

தாஜ்மஹால் திரைப்படம் மூலம் அறிமுகம்

தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய இயக்குநராக பார்க்கப்படுபவர் இயக்குநர் பாரதிராஜா. இவரது மகன்தான் மனோஜ் பாரதிராஜா (48). இவர் தாஜ்மஹால் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் படத்திற்கு பெரிய அடையாளத்தை கொண்டு வந்து சேர்த்திருந்தாலும், படத்தில் நடிகராக மனோஜ் ஈர்க்கவில்லை என்று ரசிகர்கள் கூறினர். படமும் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களை பெற்றது.

வெற்றி கிடைக்கவில்லை

இருப்பினும் தொடர்ந்து முயன்ற மனோஜ் சமுத்திரம், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால், எதுவும் அவர் பேர் சொல்லும் படமாக அமையவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக மாறிய அவர் சாம்பியன், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இயக்குநர் அவதாரம்

ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்டவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோஜ் பாரதிராஜா மார்கழி திங்கள் படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் சுசிந்திரன் எழுதியதோடு, படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

மனோஜ் பெயரில் பாரதிராஜா 'மனோஜ் கிரியேஷன்ஸ்’ என தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். சாதுர்யன் படத்தின் போது அவருக்கு ஜோடியாக நந்தனா என்பவருடன் காதலில் விழுந்த மனோஜ் அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

மனோஜுக்கு ஆர்த்திகா, மதிவதினி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மனோஜ் பாரதிராஜாவுக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் பி இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், மூன் டிவி, புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை தொடர்ந்து கடந்த 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.